இரவின் மடியில் - 2005 ஆம் ஆண்டு சூரியன் பண்பலையில் ஒலிபரப்பப்பட்ட எனது தந்தையின் கடிதம். பிடித்தபாடல்களும், காரணங்களும்!
கொங்கு மண்டலமாம் கோவை மாநகரிலிருந்து 20 கிலோமீட்டர் தூரத்தில் பொள்ளாச்சி மெயின்ரோட்டில் அமைந்துள்ள அழகிய, அமைதியான, பசுமையான கிராமம் ஒத்தக்கால்மண்டபம் எனது சொந்த ஊர். பள்ளி இறுதி வகுப்புவரை படித்து பாஸ் செய்துள்ள நான் ஒரு தனியார் நூற்பாலையில் 20 வருடங்கள் பணிபுரிந்து VRS என்ற பெயரில் வெளியேற்றப்பட்டவன். கூடா நட்பால் வாழ்க்கையில் வசந்தங்களை தொலைத்துவிட்டு தேடிக்கொண்டிருப்பவன். கடந்த காலத்தை மறந்து நிகழ்காலத்தில் போரடிக்கொண்டிருக்கும் நான் எதிர்காலத்தில் வெற்றி பெறுவோம் என தன்னம்பிக்கைக்கையோடு வாழ்ந்து கொண்டிருப்பவன். பழைய பாடல்களை விரும்பி கேட்கும் நான் சோக பாடல்களில் தனி சுகம் காண்பவன். என்னை பற்றி இது போதுமே என்று தன்னை பற்றி அறிமுகப் படுத்திக்கொண்டார் பொன்னுசாமி....
List of songs in this playlist:
மயக்கம் எனது தாயகம் - குங்குமம்
யாருக்கு நான் தீங்கு செய்தேன் - ஆயிரம் காலத்து பயிர்
சொன்னாலும் வெட்கமடா சொல்லாவிட்டால் - முத்து மண்டபம்
சிந்தித்தால் சிரிப்பு வரும் - செங்கமலத்தீவு
கடவுள் ஏன் கல்லானான் - என் அண்ணன்
ஊரார் அடித்துவிட்டால் - தாயில்லா பிள்ளை
கண்ணும் கண்ணும் பேசியது உன்னாலன்றோ - கைராசி
பசுமை நிறைந்த நினைவுகளே - ரத்தத் திலகம்
ஆசையே அலை போலே - தை பிறந்தால் வழி பிறக்கும்
செங்கனி வாய் திறந்து சிரித்திடுவாய் - யானை பாகன்
பங்கேற்பாளர்: பொன்னுசாமி, ஒத்தக்கால்மண்டபம், கோயம்புத்தூர்.
தொகுப்பாளர்: R.G. லக்ஷ்மி நாராயணா, சூரியன் பண்பலை, கோயம்புத்தூர்.
ஒலிபரப்பு: 2005
தொகுப்பு: செந்தில்பிரபு பொன்னுசாமி.
Image from Pixabay.
Ещё видео!