A PETITION FOR THE ANOINTING
பல்லவி - பலத்தினாலும் அல்ல பராக்கிரமத்தாலும் அல்ல
உம் ஆவியாலே எல்லாம் ஆகிடும் அன்பரே உந்தன் பாதம் அண்டி நான் வந்துவிட்டேன்
உம் ஆவியாலே அபிஷேகியும்
1. குறைகளை மறைப்பவன் வாழ்வடையான்
அறிக்கையைச் செய்கிறவள் தாழ்வடையான்
பரிசுத்தனாகவே நான் வாழ்ந்திடவே
பாவியாம் என்மேல் இரங்கிடுமே
-பலத்தினாலும்
2. சுயமாக நான் ஒன்றும் செய்யாமலே நிதானித்து உந்தன் சித்தம் செய்திடவே சமர்ப்பித்து உந்தன் பாதம் அடிபணிந்தேன்
ஆவியால் மறுரூபம் ஆகிடுவேன்
-பலத்தினாலும்
3. எதிரியாம் பிசாசை நான் வீழ்த்திடவே நீர் ஜெயித்தது போல ஜெயித்திடவே வசனத்தில் நிலைத்திடச் செய்திடுமே உன்னதா ! உம்மோடென்னை இணைத்திடுமே
- பலத்தினாலும்
4. விருதினைப் பெற்றுக்கொள்ள உதவிடுமே
விருதாவாய் ஓடிடாமல் காத்திடுமே பின்னானவைகளை நான் மறந்திடுவேன்
உம்மை நான் அடைந்திட தொடர்ந்திடுவேன்
-பலத்தினாலும்
5. என்று நீர் வருவீரோ என் இயேசுவே ஏங்குதென் உள்ளம் உம்மோடிணைந்திடவே
நேசத்தின் அனல் என்னில் எரிந்திடுதே நேசரை என்றென்றுமாய் மணந்திடவே
-பலத்தினாலும்
Ещё видео!