michaelsamraj@gmail.com
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, phone pay : 9443559470
பல்லவி
சீர் ஏசு நாதனுக்கு ஜெயமங்களம்; ஆதி
திரி யேக நாதனுக்குச் சுபமங்களம்.
அனுபல்லவி
பாரேறு நீதனுக்கு, பரம பொற் பாதனுக்கு,
நேரேறு[1] போதனுக்கு நித்திய சங்கீதனுக்கு. - சீர்
சரணங்கள்
1. ஆதி சரு வேசனுக்கு, ஈசனுக்கு மங்களம்;
அகிலப்[2] பிர காசனுக்கு, நேசனுக்கு மங்களம்
நீதி பரன் பாலனுக்கு, நித்திய குணாலனுக்கு,[3]
ஓதும் அனு கூலனுக்கு, உயர் மனுவேலனுக்கு. - சீர்
2. மானாபி மானனுக்கு, வானனுக்கு மங்களம்;
வளர் கலைக் கியானனுக்கு, ஞானனுக்கு மங்களம்
கானான் நல் தேயனுக்குக், கன்னிமரிசேயனுக்கு
கோனார் சகாயனுக்குக், கூறு பெத்த லேயனுக்கு. - சீர்
3. பத்து லட்ச ணத்தனுக்குச், சுத்தனுக்கு மங்களம்;
பரம பதத்தனுக்கு நித்தனுக்கு மங்களம்;
சத்திய விஸ்தாரனுக்குச், சருவாதி காரனுக்கு,
பத்தர் உப காரனுக்குப், பரம குமாரனுக்கு. - சீர்
- வே. சாஸ்திரியார்
[1] நன்னெறி
[2] பூமி
[3] குணாலயனாகிய கடவுளுக்கு
77 கீர்த்தனை | சீர் யேசு நாதனுக்கு ஜெய மங்களம் | Seer Yesu Nadhanukku | composer thought | michael samraj
Ещё видео!