Movie: Ponnu Oorukku Puthusu
Music : Ilayaraja
Lyricist : M.G.Vallaban
Singers: S.P.Shailaja
Year : 1979
Song Lyrics
சோலைக் குயிலே காலைக் கதிரே
அள்ளும் அழகே துள்ளும் ராகமே துள்ளும் ராகமே (சோலை)
வண்ண தேன் கழனி காலைக்கு வாழ்த்து பாடுதே
சின்ன பூங்குருவி நாளைக்கும் சேர்த்து தேடுதே
அசைவில் இசையில் கன்னித் தமிழே
வாடையில் ஆடிடும் கோடையின் நீரலை
மேடையின் மீது கண்ணாலே கவி பாடி
பொன் வண்ண மீனாடுதே ஓஓஓஓஒ (சோலை)
முல்லை மாலைகளை சூடிடும் வெள்ளி மேகங்கள்
நெல்லுப் பானைகளை சுமக்கும் கன்னி கோலங்கள்
அசைவில் இசையில் கன்னித் தமிழே
செங்கதிர் சிந்திடும் சித்திரை பங்குனி
திங்களில் நாளில் மந்தாரை செந்தாழம்
வந்தாடும் ஊர்கோலமே ஓஓஓஓஒ (சோலை)
Ещё видео!