மரண அறிவித்தல் மற்றும் நினைவுநாள் அறிவித்தல்கள் எமது அறிவித்தல் தளத்தில் இலவசமாக பதிவிடப்படுகின்றது. இருந்தபோதிலும் எமக்கான நிரந்தர செலவுகள் உண்டு. ஆகவே அவற்றை ஈடுசெய்ய, முடிந்தவர்கள் உங்களால் முடிந்த உதவியை, எப்பொழுதும் எமக்களிக்கலாம்.உங்கள் உதவி, எம் சேவையை மென்மேலும் சிறப்பாக செய்ய உதவியாகவும், ஊக்கமாகவும் அமையும். அறிவித்தல் சமூகம் சனலை Subscribe செய்து உங்கள் துயர்களை தொடர்ந்தும் பகிர்ந்துகொள்ளுங்கள்...
நன்றி.
மலேசியா கோலாலம்பூரைப் பிறப்பிடமாகவும், யாழ். கந்தரோடை பருத்தியோலை, கொழும்பு வெள்ளவத்தை ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட மங்கயக்கரசி குணரத்தினம் அவர்கள் 31-12- 2021 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற பாலசிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அருமைப் புத்திரியும்,காலஞ்சென்ற Dr. குணரத்தினம் அவர்களின் அன்பு மனைவியும்,சைலஜி(சுது- ஐக்கிய அமெரிக்கா), பிரசாத்(அஜித் - கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,ஈஸ்வரன்(ஐக்கிய அமெரிக்கா), பாலினி(கனடா) ஆகியோரின் அன்பு மாமியாரும்,சியாலன்(ஐக்கிய அமெரிக்கா) அவர்களின் அன்புப் பாட்டியும்,ஸ்ரீரத்தினம்(அப்பு- அவுஸ்திரேலியா), காலஞ்சென்ற கங்கேஸ்வரன், மகேந்திரன்(துரையன்- கொழும்பு), சண்முகேந்திரன்(அப்பன்- ஜேர்மனி), மாலினி(ரதி- கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும் ஆவார்.அன்னாரின் பூதவுடல் 02-1-2022 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 09:00 மணி முதல் கல்கிசை மகிந்த மலர்ச் சாலையில் (Mahinda Florist, Mount-Lavania) அஞ்சலிக்காக வைக்கப்பட்டு பின்னர் மு.ப 11:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று, அதனைத் தொடர்ந்து பி.ப 02:00 மணியளவில் கல்கிசை இந்து பொது மயானத்தில் (Mount-Lavania Cemetery – Hindu Section) தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல்: குடும்பத்தினர்
[ Ссылка ]
Ещё видео!