1965ஆம் ஆண்டு 'வீர அபிமன்யு' திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'பார்த்தேன்சிரித்தேன் பக்கத்தில் அழைத்தேன்
உனைத்தேன் என நான் நினைத்தேன் '. பாடியவர்கள் P.B.ஸ்ரீநிவாஸ், P. சுசீலா .
படத்திற்கான பாடல்களை இயற்றியவர் கவிஞர் கண்ணதாசன். இசையமைப்பு திரை இசைத்திலகம் K. V. மகாதேவன். பாடல் சஹானா ராகத்தில் அமைந்தது.
இந்தப் பாடலில் 65 முறை தேன் என்ற பதம் இடம்பெற்றிருக்கிறது என்று ஒரு அன்பர் கணக்கிட்டுச் சொல்லியிருக்கிறார். கவிஞர் சார்ந்திருந்த கட்சியினர் கம்பனின் கவியில் விரசத்தைத் தேடி கம்பரசம் எழுதிக் கொண்டிருந்தபோது கண்ணதாசன் அதில் கவி நயத்தைக் கண்டார்.
தோள்கண்டார் தோளே கண்டார்
தொடுகழல் கமலம் அன்ன
தாள்கண்டார் தாளே கண்டார்
தடக்கை கண்டாரும் அஃதே
வாள்கொண்ட கண்ணார் யாரே
வடிவினை முடியக் கண்டார்
ஊழ்கொண்ட சமயத்து அன்னான்
உருவுகண் டாரை ஒத்தார்.
இந்தக் கவியில் கண்டார் என்ற சொல் பலமுறை வருவது கண்டு இந்தப் பாடலில் தேன் என்ற சொல்லை அடுக்கியது போல இதயக் கமலம் படத்தில் அதே சொல்லாட்சியில் 'தோள் கண்டேன் தோளே கண்டேன்' என்று எழுதினார்.
Ещё видео!