திருவிடைமருதூர்
ஒரு மனிதனின் தலைமுறை சாபத்தால் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்படுகின்றான் என்றால், தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கும் எப்படி என்ற தல வரலாற்றை காண்போம்.
ஒரு மனிதனின் தலைமுறை சாபத்தால் வாழ்க்கையில் மிகுந்த கஷ்டப்படுகின்றான் என்றால், தஞ்சாவூரில் உள்ள திருவிடைமருதூரில் வழிபட்டால் சாபம் நீங்கும் எப்படி என்ற தல வரலாற்றை காண்போம்.
மனிதனாக பிறந்த எல்லோரும் வசதியுடன் வாழ்வதில்லை. சிலர் பிறக்கும் போதிலிருந்து இறக்கும் வரையில் நல்ல வசதி வாய்ப்புடனும், சிலர் பிறந்ததிலிருந்து வருமையில் வாடி இறப்பவர்களாகவும், சிலர் திடீரென பணக்காரராகவும், சிலர் திடீரென தன் பணக்கார நிலை சரிந்து வறுமையில் வாடுவதுமாக மனித வாழ்க்கை உள்ளது.
இப்படி பொருளாதார ரீதியாக மட்டுமில்லாமல் திருமணம் தள்ளிப்போகுதல், குழந்தை பேரின்மை, திருமணமான தம்பதியர் இடையே பிரச்னை என பிரச்னைகள் நீண்டு கொண்டே செல்கின்றது.
இப்படி மனித வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்கள் முன்னோர்களின் சாபங்களால் ஏற்படுவதாக நம்பப்படுகிறது.
சாபகத்தை நீக்கும் திருவுடைமருதூர் மகாலிங்கேஸ்வரர் :
முன்னோர்களின் சாபம் பிரம்மஹத்தி தோஷம் என்பார்கள். இதை போக்கக் கூடிய ஆலயமாக இந்த திருவுடைமருதூர் திருவிடைமருதூர் மகாலிங்கேசுவரர் திருக்கோயில் உள்ளது.
இந்த தலத்தை சம்பந்தர், அப்பர், சுந்தரர் என நாயன்மார்கள் பாடப்பெற்ற தலமாகும்.
தல வரலாறு:
இந்த சிவாலயம் 1200 ஆண்டு பழமையானது. இந்த கோயிலில் மருத மரம் தல விருட்சமாக கொண்டுள்ளது. மருத மரத்தை தல விருட்சமாக 3 கோயில்கள் மட்டும் கொண்டிருக்கின்றன. வடக்கே ஸ்ரீசைலம் எனப்படும் வடமருதூர், தெற்கே திருநெல்வேலி புடார்ச்சுனம் எனப்படும் திருப்புடை மருதூர். 3வது இந்த திருவுடைமருதூர்.
இக்கோவில் 3 பிரகாரங்களைக் கொண்டதாகும். இம்மூன்று பிரகாரங்களிலும் வலம் வருதல் மிகவும் புனிதமானதாகக் கருதப்படுகிறது.
அஸ்வமேதப் பிரகாரம்:
இது வெளிப் பிரகாரத்தை வலம் வருதல் அஸ்வமேத யாகம் செய்த பலனைக் கொடுக்கும்.
இது இரண்டாவதும், மத்தியில் உள்ள பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருதல் சிவபெருமான் குடியிருக்கும் கைலாச பர்வதத்தை வலம் வந்ததற்குச் சமம் என்று கூறப்படுகிறது.
இது மூன்றவதாகவும் உள்ளே இருக்கக் கூடியதுமான பிரகாரமாகும். இப்பிரகாரத்தை வலம் வருவதால் மோட்சம் கிடைக்கும் என்று கூறப்படுகிறது.
தல சிறப்பு:
ஒரு முறை மாலை நேரத்தில் வரகுண பாண்டியன் வேட்டைக்கு சென்று திரும்பிக் கொண்டிருந்த போது வழியில் உறங்கிக் கொண்டிருந்த அந்தனன் மீது குதிரையின் காலில் மிதிபட்டு இறந்து விட்டான். இது வரகுண பாண்டியன் தெரியாமல் செய்தது என்றாலும் அவருக்கு அந்தணனின் ஆவி பற்றிக் கொண்டது.
பெரிய சிவபக்தனனான வரகுண பாண்டியன் இதிலிருந்து விடுபட மதுரை சோமசுந்தரரை வணங்கினான். அப்போது வரகுண பாண்டியன் கனவில் தோன்றி அவரின் எதிரியான சோழ நாட்டில் உள்ள திருவிடைமருதூர் சென்று வழிபட்டால் தோஷம் நிவர்த்தி ஆகும் என கூறியது.
எப்படி எதிரியான சோழ நாட்டுக்கு செல்வது என நினைத்துக் கொண்டிருந்த போது, பாண்டிய நாடு மீது சோழ மன்னன் படையெடுத்து வந்திருப்பதாக செய்தி கிடைத்தது. இந்த போரில் வென்ற வரகுண பாண்டியன், சோழ படைகளை அவர்களது எல்லைக்கு விரட்டினான்.
அப்போது திருவிடைமருதூர் கோயிலில் கிழக்கு வாயில் வழியாக நுழைந்து மகாலிங்கேஸ்வரரை வழிபட்டார். அவர் ஆலயத்தில் நுழையும் போது, அவரை பற்றி இருந்த அந்தணனின் ஆவி வெளியே நின்றது. வரகுண பாண்டியன் திரும்பி வரும் போது மீண்டும் பற்றிக் கொள்ளலாம் என நினைத்திருந்தது
அப்போது இறைவன், நீ மேற்கு வாயில் வழியாக வெளியே போ என கூறினார். இதனால் வரகுண பாண்டியனை தொற்றி இருந்த பிரம்ஹத்தி தோஷம் நீங்கியது.
வரகுண பாண்டியன் சென்றது போல இன்றும், இந்த கோயிலுக்கு செல்லும் சிவ பக்தர்கள் கிழக்கு வாயிலில் நுழைந்து மேற்கு வாயில் வழியாக வெளியே செல்வது வழக்கமாக உள்ளது.
கும்பகோணத்தில் இருந்து 9 கி.மி. தொலைவில் மயிலாடுதுறை செல்லும் சாலை வழியில் இத்தலம் இருக்கிறது. கும்பகோணத்தில் இருந்து நகரப் பேருந்து வசதிகள் இருக்கின்றன.
Ещё видео!