1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா இயக்கத்தில் T. M. சௌந்தரராஜன் நடித்து வெளிவந்த 'அருணகிரிநாதர்'
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'தண்டையணி வெண்டையங் கிண்கிணி சதங்கையும் '. பாடியவர்
T.M.சௌந்தரராஜன் . அருணகிரியாரின் திருச்செந்தூர் திருப்புகழ் . படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர். .
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே.
Ещё видео!