1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா இயக்கத்தில் T. M. சௌந்தரராஜன் நடித்து வெளிவந்த 'அருணகிரிநாதர்'
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'பக்கரை விசித்ரமணி பொற்கலணை இட்ட நடை '. பாடியவர்
T.M.சௌந்தரராஜன் . திருப்புகழ் பாட அருளவேண்டி 'விக்கின சமர்த்தனாம்' விநாயகப் பெருமானைக் குறித்துப் அருணகிரியார் பாடிய திருப்புகழ் . திருப்புகழ் நூலில் முதலாவது இறைவணக்கமாக இடம் பெறும் பாடல். படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர். .
பக்கரைவி சித்ரமணி பொற்கலணை யிட்டநடை
பட்சியெனு முக்ரதுர ...... கமுநீபப்
பக்குவம லர்த்தொடையும் அக்குவடு பட்டொழிய
பட்டுருவ விட்டருள்கை ...... வடிவேலும்
திக்கதும திக்கவரு குக்குடமும் ரட்சைதரு
சிற்றடியு முற்றியப ...... னிருதோளும்
செய்ப்பதியும் வைத்துயர்தி ருப்புகழ்வி ருப்பமொடு
செப்பெனஎ னக்கருள்கை ...... மறவேனே
இக்கவரை நற்கனிகள் சர்க்கரைப ருப்புடனெய்
எட்பொரிய வற்றுவரை ...... இளநீர்வண்
டெச்சில்பய றப்பவகை பச்சரிசி பிட்டுவெள
ரிப்பழமி டிப்பல்வகை ...... தனிமூலம்
மிக்கஅடி சிற்கடலை பட்சணமெ னக்கொளொரு
விக்கிநச மர்த்தனெனும் ...... அருளாழி
வெற்பகுடி லச்சடில விற்பரம ரப்பரருள்
வித்தகம ருப்புடைய ...... பெருமாளே.
Ещё видео!