1. மேகமீதில் தூதரோடிதோ இதோ -2
மேசியா கிறிஸ்தேசையா எனதாசை நேசையா -2
வாரார் வாரார் மகிழ் கெம்பீரமாய் -2
2. மணவாளன் இயேசு வருகிறார் இதோ இதோ -2
மணவாட்டி சேர்த்திட மரித்தவர் எழ மகிமை ஓங்கவே -2
மாதேவதூதன் முழங்கவே -2
3. ஆரவாரம் கேட்குதே அதோ அதோ -2
ஆட்டுக்குட்டியின் பாட்டோடெக்காளம் அதிர்ந்தொலிக்கவே -2
அல்லேலூயா வென்றார்பரிப்போமே -2
4. ஜீவமுடி சூடி நாம் அங்கே அங்கே -2
தேவசாயலாகி அவரோடு வாழ்வோமே -2
ராஜராஜராக ஆள்வோமே -2
Ещё видео!