Music -K.Jeyanthan
[ Ссылка ]
Lyrics -Neduntheevu Mukilan
[ Ссылка ]
Singers -V.Kandappu ,K.Jeyanthan
Camera -Pirathapan
[ Ссылка ]
producer -Ezra (Canada)
கொக்கு வில்லு கொக்கே என்னை
கொத்தி திண்ணாதே...
பின்னால வந்தன்
போனன் தெல்லிப்பழையே...
நல்லுரு கந்தன் வீதியில
ஒவ்வொரு வெள்ளியும் உருண்டெழுந்தன்.
பாச ஊர் அந்தோனியார் கோயிலில
ஒவ்வொரு செவ்வாயும் எண்ணை விட்டன்.
பண்ணையடி பாலம் கீளே
தண்ணியடிச்சு நொந்து போனெனே...
கொட்டடி சந்தையில வெட்டும் மீனாய்
துண்டாய் போனேனே...
(கொக்கு வில்லு)
பரமேஸ்வரா சந்தியில நீ இறங்கி
கம்பஸ் போனா பலாலி றோட்டில் இதயம் வெடிக்கும்.
மினி பஸ்சில் எற நீ ஸ்ரான்லி றோட்டில் நடந்தா
பஸ் ராண்டில் என் மனசு காயும்
காரை நகர் கடற்கரையில்
உன்னை படம் கீறினேன்.
வட்டுக்கோட்டை வயல் வெளியில்
உனக்கு பூ ஆய்கிறேன்.
பருத்தி துறை வடையை போல
றொம்ப நீ உறைக்கிற
நீர் வேலி வாழைப்பழம் போல்
நல்லா நீ இனிக்கிற
புங்குடுதீவு புகையிலையாய்
மூட நீ ஏத்திற
நெடுந்தீவு குமுதினி படகாய்
இடையிடையே நிக்கிற
(கொக்கு வில்லு)
துரையப்பா ஸ்ரேடியம் நீ மைச் பாக்க
வந்தா கிறிக்கட் பந்து கோட்டையை தாண்டும்.
முனியப்பர் கோயிலை நீ கை நீட்டி தொழுதா
புல்லுக்குளத்திலம் பூ பூக்கும்
தின்னவேலி மாக்கற்ரில
உன்னை விலை கேக்கிறன்.
கே கே எஸ் ரோட்டில
உன்னை தேடி அலையிறன்.
கோப்பாய் கோவா போல
கும்முண்ணுதான் இருக்கிற
இனுவில் தவில போல
தகதகன்னு யொலிக்கிற
செம்மனி சுடலையில
என்னை எரிக்க நிக்கிற
கீரிமலை கடலில
என் அஸ்தி கரைக்க பாக்கிற
(கொக்கு வில்லு)
Kokkuvil Kokkey (Music -K.Jeyanthan
Теги
Kokkuvil Kokkeykokuvilkokkuvil kokkeyKokkuviljeyanthansongskandappujeyanthansongskandappuvavuniyamanneyyaaldevijeyanthanvavuniyakandappujeyanthanvavuniyasongssrilankantamilsongssrilanka tamil songstamil music albumvavuniyajeyanthanjaffnasongsjaffnajaffna tamil songneduntheevumukilank.jeyanthanlingathala55