ஸ்ரீஸ்ரீஸ்ரீ மஹாபெரியவா கவசம்.
Credits:
Lyrics: Smt. Jayshree Subramanian
Singer: Smt. Jyothi Ashok
Slides/Video: Aprameya Ashok
Lyrics:
காப்பு:
நின் பாதம் சரணடைந்தோம் குருநாதா
நின் அருளை வேண்டி நின்றோம் குருநாதா
நின் பாதம் பணிந்து இந்த குரு கவசம்தனை
அனுதினமும் பக்தியுடன் படிக்க
குருவருளும் திருவருளும் கிட்ட
கஜமுகனே குருபரனே சண்முகனே காப்பு
1.(சஷ்டியை நோக்க)
ஜெய ஜெயசங்கர ஹர ஹர சங்கர
ஜெயஜெய சங்கர ஹரஹர சங்கர
ஜெயஜெய ஜெயமே பெரியவா பெரியவா
ஹரஹர சிவமே பெரியவா பெரியவா
அனுஷத்தின் ஜோதியே ஸ்ரீ மஹா பெரியவா
ஆத்ம சக்தி நீயே பெரியவா பெரியவா
இகபர சுகமே பெரியவா பெரியவா
ஈசனே நேசனே பெரியவா பெரியவா
2.(ரஹண பவச)
உருவாய் அருவாய் குருவாய் வருவாய்
ஊன் உறவாகி ஊழ்வினை களைவாய்
எம் மனக்கோயிலில் இருப்பாய் நீயே
ஏகாந்தரூபமாய் அமர்ந்திருப்பாயே
ஐம்புலன் அடக்கிட அருள் புரிவாயே
ஒப்புயர்வில்லாத குருவும் நீயே
ஓம்காரநாதமாய்ஒலித்திடுவாயே
ஔடதம் நீயே பிணிக்கு மருந்தே
3. (ஆறுமுகமும்)
கருணை கடலே வருக வருக
காருண்யமூர்த்தியே வருக வருக
கிட்டாத ஞானப்பழம் நீ வருக
கீதையின் சாரமே வருக வருக
குஞ்சிதபாதம் அசைந்திட வருக
கூப்பிட்ட குரலுக்கு ஓடோடி வருக
கெட்டதும் நல்லதும் உரைத்திட வருக
கேட்டதைக் கொடுக்கும் வள்ளலே வருக
4.(எந்தனை ஆளும்)
கைக்கொண்டு அணைத்து எம்மை காத்திட வருக
கொற்றவன் உன் பாதம் பணிவோம் வருக
கோபுர கலசமே எம்மை உயர்த்திட வருக
கௌமாரம் போற்றும் ஸத்குருவே வருக
சத்திய தெய்வமே சாந்த ஸ்வரூபமே
சிந்தையில் குடிக் கொண்ட சிவமே வருக
சீலமே ஞானமே சுந்தர வதனமே
சூழும் மெய்சுடரே வருக வருக
5. (கன்னம் இரண்டும்)
செவ்விதழ் சிரிப்பும் உன் சிறுவிழிப் பார்வையும்
சேர்ந்திட்டால் அருள்மழை ஞாலத்தைக் காக்கும்
சைவமும் வைணவமும் நின் புகழ்பாடும்
சொல்லச் சொல்ல உந்தன் மகிமையும் கூடும்-- உன்
சரணாலயம் வந்து சரணடைந்தாலே
சோதனையாவும் சாதனையாகும்
குருவாரம் குருபூஜை செய்திடுவோமே
சௌந்தர்ய ரூபனே காத்தருள்வாயே
6.(ஐவிரலடியினை)
தந்தையாய் எங்கள் மதிதனைக் காப்பாய்
தாயுமாகி எங்கள் சொல்தனைக் காப்பாய்
திருவே குருவே நல் எண்ணங்கள் வளர்ப்பாய்
தீனதயாளா செயல்தனைக் காப்பாய்
துன்பமும் துயரமும் தீண்டாமல் காப்பாய்
தூயவர் உள்ளத்தில் குடிக்கொண்டு காப்பாய்
தெரிந்தும் தெரியாமல் யாம் செய்யும் பிழைகளை
தேனாரமுதே பொறுத்தருள்வாயே
7. (தாக்க தாக்க )
தையலர் திருப்பாவை பாடிடச் செய்தாய்
தொண்டர்தம் தேவாரம் ஓதிடப் பணித்தாய்
தோடுடை செவியனாய் வேதத்தை ரட்சித்தாய்
திருவாசகத்தேனை பருகிடச் செய்தாய்
பக்தியை பரப்பி ஆன்மீகம் வளர்த்தாய்
பாரதம் முழுவதும் பாதம் பதித்தாய்
பிறவிப் பயனை தந்தாட்கொண்டாய்
பீடத்தில் அமர்ந்து தர்மத்தை காத்தாய்
8.(ஆனையடியினில்)
புண்ணியனே உன்னை நினைத்தால் போதுமே
பூரண வாழ்வை வாழ வைப்பாயே
பெரியவா பெரியவா என்று சொன்னாலே
பேரருளாளா அருள் புரிவாயே
பைந்தமிழில் இந்த குரு கவசம் தனை - உன்
பொற்பாதம் பணிந்தே ஜெயமணி எழுதிட
போற்றிப் போற்றி என்று உனை துதித்திடவே
பௌர்ணமி நிலவே துணை புரிவாயே
9.(குத்து குத்து)
மஹாஸ்வாமி எங்கள் சிரஸினைக் காக்க
மஹாபெரியவா மதிதனைக் காக்க
மஹாமாமுனி நெற்றியைக் காக்க
மஹாயோகி கண்ணிரண்டையும் காக்க
மஹாமௌனி எங்கள் வாய்தனைக் காக்க
மஹா வேதி எங்கள் செவிகளைக் காக்க
மஹா தபஸ்வி எங்கள் கைகளைக் காக்க
மஹா ஞானி எங்கள் உயிரினைக் காக்க
10.(எல்லா பிணியும்)
நங்கை நாயகா கருணா முர்த்தி
அனைத்தும் நீயே என்றுணர்ந்தோமே
எண்ணம் முழுவதும் இருப்பது நீயே
எண்ணிய யாவையும் நடத்தி வைப்பாயே
பெரியவா நாமத்தை துதித்திடுவோமே
பெரியவா ரூபத்தில் லயித்திடுவோமே
பெரியவா காட்டிய வழி செல்வோமே
பெரியவா பாதத்தில் சரணடைவோமே
11 (பழனி பதிவாழ்)
விழுப்பரத்தில் பிறந்த சுவாமிநாத சங்கரா
சன்யாசம் பெற்ற கலவை சங்கரா
காமகோடி பீடமே காஞ்சி சங்கரா
பிருந்தாவன ப்ரவேசமே காமாக்ஷி சங்கரா
மணிமண்டபமாய் ஓரிருக்கை சங்கரா
வேதஸ்வருபனாய் தேனம்பாக்கம் சங்கரா
கோவிந்தபுரத்தில் தபோவன சங்கரா
ஸ்ரீ சங்கராபுரத்தில் சதுர்வேத சங்கரா
12 (வாழ்க வாழ்க)
ஸ்ரீ ஆதிசங்கர ஸத்குரு வாழ்க வாழ்க
ஸ்ரீ சந்திரசேகர ஸத்குரு வாழ்க வாழ்க
ஸ்ரீ ஜெயேந்திர ஸத்குரு வாழ்க வாழ்க
ஸ்ரீவிஜயேந்திர ஸத்குரு வாழ்க வாழ்க
அத்வைத சத்குரு வாழ்க வாழ்க
சனாதன சத்குரு வாழ்கவாழ்க
வாழ்க வாழ்க சிவகுரு வாழ்க
வாழ்க வாழ்க ஜகத்குரு வாழ்க
13 (ஓதியே ஜபித்து)
பெரியவா கவசத்தை தினமும் ஓதிட
எல்லா பிணியும் அகன்றிடுமே
செல்வமும் வளமும் கூடிடுமே
பக்தியும் ஞானமும் பெருகிடுமே
நினைத்த காரியம் கைகூடிடுமே
அக்ஞான இருளும் நீங்கிடுமே
பெரியவா கவசம் பாப விமோசனம்
பெரியவா கவசம் மோக்ஷத்தை தந்திடும்
14.(மேவிய வடிவுறும்)
தென்னாடுடைய சிவமே போற்றி
என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி
சர்வக்யனே போற்றி போற்றி
சர்வ வியாபியே போற்றி போற்றி
மாயப்பிறப்பறுக்கும் பெரியவா போற்றி
கனகாபிஷேகம் கண்ட பெரியவா போற்றி
கண்கண்ட தெய்வமே போற்றி போற்றி
கலியுக தெய்வமே போற்றி போற்றி
தென்திசை அமர்ந்திட்ட குருவடி சரணம்
பெரியவா திருவடிச் சரணம் சரணம்
ஜெய ஜெய சங்கரா சரணம் சரணம்
ஹர ஹர சங்கரா சரணம் சரணம்.
சுபம்
,
Ещё видео!