#சனிபகவான் #கவசம் #bombaysaradha
சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in Tamil
சனியைப் போல் கொடுப்பவரும் எவரும் இல்லை. கெடுப்பவரும் எவரும் இல்லை. சனி பகவான் கொடுக்கும் துன்பங்களிலிருந்து விலகி, நன்மைகளைப் பெற நாம் சனி கவசம் பாட வேண்டும். இதில் சனி கவசம் பாடல்களை இதில் காண்போம்.
நீதி நாயகனாக விளங்கும் சனி பகவான், ஒவ்வொருவரின் கர்ம வினைகளுக்கு ஏற்ற பலன்களை அளிப்பார். இவ்வாறு ஒருவரின் நல்வினை மற்றும் தீவினைகளுக்கு ஏற்ற பலன்களை வழங்குவதால், சனீஸ்வரனுக்கு ஈஸ்வர பட்டம் கிடைத்தது. இவர் துன்பத்தை மட்டும் தரக்கூடியவர் அல்ல. தன்னுடைய வேலைகளில் கவனமாகவும், சரியாகவும், நேர்மையாகவும் செய்யும் நபர்களுக்கு யாரும் எதிர்பார்க்காத பலன்களை செய்வார். சனீஸ்வரன் துன்பம் தரக்கூடிய காலம் ஏழரை சனிக்காலம். சனி தசை நடப்பது அஷ்டம சனி என்று கூறுவர். அர்த்தாஷ்டம சனி நடக்கும் போது, சனீஸ்வர பகவானுக்கு விளக்கு ஏற்றி சனி கவசத்தை மனமுறுகி பாராயணம் செய்யும் போது துன்பங்களில் இருந்து நம்மை விலக்கி வைப்பார்.
பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani Pariharam
பாடாய் படுத்தும் ஏழரை நாட்டு சனி! தப்பிக்க வேண்டிய செய்ய வேண்டியவை..! | Ezharai Nattu Sani Pariharam
சனி பகவானின் சனி கவசம்! தினந்தோறும் பாட கஷ்டங்கள் நீங்கும்.! | Sani Kavasam in TamilRepresentative Image
சனி கவசம் பாடல் வரிகள்
கருநிறக் காகம் ஏறி
காசினி தன்னைக் காக்கும்
ஒரு பெரும் கிரகமான
ஒப்பற்ற சனியே! உந்தன்
அருள் கேட்டு வணங்குகின்றேன்!
ஆதரித் தெம்மை காப்பாய்!
பொருளோடு பொன்னை அள்ளி
பூவுலகில் எமக்குத் தாராய்!
எட்டினில் இடம் பிடித்தும்
கோளாறு நான்கில் தந்தும்
கொண்டதோர் கண்ட கத்தில்
ஏழினில் நின்ற போதும்
இன்னல்கள் தாரா வண்ணம்
ஞாலத்தில் எம்மைக் காக்க
நம்பியே தொழுகின்றேன் நான்!
பாரினில் நன்மை கிட்ட
எண்ணிய எண்ணம் எல்லாம்
ஈடேறி வழிகள் காட்ட
எண்ணெய்யில் குளிக்கும் நல்ல
ஈசனே உனைத் துதித்தேன்!
புண்ணியம் எனக்கு தந்தே
புகழ் கூட்ட வேண்டும் நீயே!
காகத்தில் ஏறி நின்றாய்
இரும்பினை உலோகமாக்கி
எள் தனில் பிரியம் வைத்தாய்!
அரும்பினில் நீல வண்ணம்
அணிவித்தால் மகிழ்ச்சி கொள்வாய்
பெரும் பொருள் வழங்கும் ஈசா
பேரருள் தருக நீயே!
சங்கடம் விலக வைப்பாய்
அணிதிகழ் அனுஷம், பூசம்
ஆன்றோர் உத்திரட்டாதி
இனிதே உன் விண்மீனாகும்
எழில் நீலா மனைவியாவாள்!
பணியாக உனக்கு ஆண்டு
பத்தொன்போ தென்று சொல்வாய்!
குறைகளை அகல வைப்பாய்
எழிலான சூரியன் உன்
இணையற்ற தந்தை யாவார்!
விழி பார்த்து பிடித்துக் கொள்வாய்
விநாயகர் அனுமன் தன்னைத்
தொழுதாலோ விலகிச் செல்வாய்
துணையாகி அருளைத் தாராய்!
அளவிலா பிரியம் வைத்த
மன்னனே! சனியே! உன்னை
மனதாரப் போற்றுகின்றோம்!
உன்னையே சரணடைந்தோம்!
உயர்வெல்லாம் எமக்குத் தந்தே
மன்னர் போல் வாழ்வதற்கே
மணியான வழி வகுப்பாய்!
மணியான மகர வாசா!
தந்ததோர் கவசம் கேட்டே
சனி என்னும் எங்கள் ஈசா!
வாழ்வினை வசந்தம் ஆக்கு!
எந்த நாள் வந்த போதும்
இனிய நாள் ஆக மாற்று!
சனி பகவான் கவசம் - Sani Bhagavan Kavasam
Теги
சிவம் ஆடியோShivam Audiosivam audiosivamaudiossani bhagavan songssani devசனி கவசம் pdfசனி பகவான் ஸ்லோகம்சனி பகவான் துதிசங்கடம் தீர்க்கும் சனி பகவானேசனி சாலிசா tamil pdfநீல சனி ஸ்தோத்திரம் pdfசனி பகவான் 108 போற்றிசனி பகவான் மந்திரம் தமிழில்sani bhagavan kavasam in tamil pdfbombay saradha mp3 songs free downloadsivapuranam bombay saradha mp3 downloadbombay saradha sivan songsbombay saradha ringtone download