கூட்டுக் குடும்பம்
பெற்றோர், அவர்களது மணமாகாத பிள்ளைகள், மணமான பிள்ளைகளும் அவர்களது துணைவரும் பிள்ளைகளும், சிலசமயம் பெற்றோரின் உடன்பிறந்தவர்கள் என இரத்த உறவால் பிணைக்கப்பட்ட, நேர்வழியிலும், கிளை வழியிலும் உறவினரானவர்கள் ஒரே வீட்டில் ஒரே குடும்பமாக வாழ்வது கூட்டுக் குடும்பம் (Joint Family) எனப்படும். இந்தியச் சமுதாயத்தில் இத்தகைய முறை பரவலாகக் காணப்படுகின்றது. இந்தியாவில் பொதுவாக ஆண்வழி உறவினர்களே கூட்டுக் குடும்பமாக வாழ்ந்து வருகிறார்கள்.
இவற்றையும் பார்க்கவும்:
* தனிக் குடும்பம் (Nuclear Family)
* உள்தனிக் குடும்பம் (Subnuclear Family)
* இணைப்புவழித் தனிக் குடும்பம் (Suplimented Subnuclear Family)
தனிக் குடும்பம்
கணவனும், மனைவியும் தங்கள் பிள்ளைகளுடன் ஒன்றாக வாழுகின்ற நிலையிலுள்ள குடும்பமே கருக் குடும்பம் அல்லது தனிக் குடும்பம் (Nuclear Family) எனப்படுகின்றது. தற்காலச் சமூகத்தில் இவ்வகைக் குடும்பங்களே எங்கும் பரவலாகக் காணப்படுகின்றன.
பிள்ளைகளுக்குள் உறவுமுறை
பிள்ளைகள்
┌─────────┴────────┐
➊ ➋
சகோதரன் சகோதரி
┌──────────┴──────┐ ┌──────┴──────┐
➊ ➋ ➊ ➋
அண்ணா தம்பி அக்கா தங்கை
விரிந்த குடும்பம்
கணவன், மனைவி, அவர்களுடைய பிள்ளைகள், பிள்ளைகளுடைய மனைவிமார்கள், அவர்களுடைய பிள்ளைகள் என எல்லோரும் ஒரே வீட்டில் வாழ முற்படும் போது விரிந்த குடும்பம் (Extended Family) தோன்றுகின்றது. விரிந்த குடும்பமொன்றின் உறுப்பினர்களின் தொடர்பு நிலைகளையொட்டி அது பல்வேறு வகைகளாகப் பிரிக்கப்படலாம்.
1. நேர்வழி விரிந்த குடும்பம்
2. கிளைவழி விரிந்த குடும்பம்
3. தந்தைவழி விரிந்த குடும்பம்
4. தாய்வழி விரிந்த குடும்பம்
5. கூட்டுக் குடும்பம்
என்பன இவ்வகைகளுள் சிலவாகும்.
Ещё видео!