#theanisai #geminiganesan #oldsongs #kanchana #tamilsongs #old #lovesongs
மங்கையரில் மகாராணி பாடல் | ஜெமினி கணேசன், காஞ்சனா இனிமையான காதல் பாடல் . Tamil Lyrics in Description .
Movie : Avalukendru Oru Manam
Music : M. S. Viswanathan
Song : Mangayaril Maharani
Singers : S. P. Balasubrahmanyam, P. Susheela
Lyrics : Kannadasan.
பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும்
எஸ். பி. பாலசுப்ரமணியன்
இசையமைப்பாளர் :
எம். எஸ். விஸ்வநாதன்
ஆண் : மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
ஆண் : மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
பெண் : கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
பெண் : கோடையிலே மழை போல் நீ
கோவிலிலே சிலை போல் நீ
ஆடவரில் தலைவன் நீ
அடிமை நான் உன் ராணி
ஆண் : மங்கையரில் மகாராணி..
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…
ஆ…..ஆ……ஆ…ஆ……ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
ஆண் : மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்
மையோடு கொஞ்சம்
பொய் பேசும் கண்கள்
கையோடு இங்கே
கதை சொல்ல வேண்டும்
பெண் : தெய்வீக பாடல்
தாய் சொல்ல கேட்டு
தெய்வீக பாடல் தாய்
சொல்ல கேட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு
நான் பாட வந்தேன்
ஆனந்த பாட்டு
ஆண் : வெள்ளி சங்குகள்
துள்ளி எழுந்தன
நெஞ்சில் விளையாட
பெண் : அங்கங்கள் எங்கெங்கோ
நாணம் மெல்ல தடை போடா
ஆண் : மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
ஆண் : மங்கையரில் மகாராணி..
பெண் : ஆ…..ஆ…..ஆ…..ஆ……ஆ…
ஆ…..ஆ……ஆ…ஆ……ஆ….
ஆ…..ஆ…..ஆ…..ஆ……
பெண் : மாணிக்க தேரின்
காணிக்கையாக
முத்தங்கள் நூறு தித்திக்க வேண்டும்
ஆண் : தீராத ஆசை கோடானு கோடி
தேனாக ஓடும் தானாக தீரும்
பெண் : தங்க தாமரை
மொட்டு விரிந்தது மஞ்சள் நீராட
சொல்லுங்கள் அங்கங்கே
ஆண் : நானும் கொஞ்சம் கவி பாட
ஆண் : மங்கையரில் மகாராணி
மாங்கனி போல் பொன்மேனி
எல்லையில்லா கலைவாணி
என்னுயிரே யுவராணி
Ещё видео!