Book 1 – Aram (அறம்) திருக்குறள் - பால்: அறத்துப்பால் / Arathuppal
இயல்: பாயிரவியல்.
அதிகாரம் 2 / Chapter 2: கடவுள் வாழ்த்து / The Praise of God / Athikaram 2 : Vaan Sirappu
குறள் 11-20 | Kural 11-20 | Couplet 11-20
குறள் 11:
வான்நின்று உலகம் வழங்கி வருதலால்
தான்அமிழ்தம் என்றுணரற் பாற்று.
Translation:
The world its course maintains through life that rain unfailing gives;
Thus rain is known the true ambrosial food of all that lives.
Vaanin Rulagam Vazhangi Varudhalaal
Thaanamizhdham aendruNaraR Paatru
விளக்கம்:
மழை பெய்ய உலகம் செழிப்பாக வாழ்ந்து வருவதால் தான் உலகம் நிலைபெற்று வருகிறது; அதனால் மழையானது உலகத்தில் வாழும் அனைத்து உயிர்களுக்கும் அமிழ்தம் என்று கூறப்படுகிறது.
Explanation:
By the continuance of rain the world is preserved in existence; it is therefore worthy to be called ambrosia.
குறள் 12:
துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉம் மழை.
Translation:
The rain makes pleasant food for eaters rise;
As food itself, thirst-quenching draught supplies.
Thuppaarkkuth Thuppaaya Thuppaakkith Thuppaarkkuth
Thuppaaya Thoou Mazhai
விளக்கம்:
உண்பவர்களுக்கு நல்ல உணவுப் பொருள்களை விளைவித்துத் தருவதோடு, சமைக்கப்பட்ட நல்ல உணவுகளை உண்பவர்க்கு இன்னுமோர் உணவாகவும் பயன்படுவது அந்த மழையே.
Explanation:
Rain produces good food, and is itself food.
குறள் 13:
விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி.
Translation:
If clouds, that promised rain, deceive, and in the sky remain, Famine, sore torment, stalks o'er earth's vast ocean-girdled plain.
ViN indru Poippin Virineer Viyanulakaththu
uLnhin Rudatrum pasi
விளக்கம்:
மழை பெய்யாமல் மழைநீர் பொய்த்து விட்டால், கடலால் சூழப்பட்ட இவ்வுலகில் பசியின் கொடுமை இப்பேருலகத்தில் வாழும் எல்லா உயிர்களையும் வாட்டி வதைக்கும்.
Explanation:
If the cloud, withholding rain, deceive (our hopes) hunger will long distress the sea-girt spacious world
குறள் 14:
ஏரின் உழாஅர் உழவர் புயல்என்னும்
வாரி வளங்குன்றிக் கால்.
Translation:
If clouds their wealth of waters fail on earth to pour, The ploughers plough with oxen's sturdy team no more.
Erin uzhaaar uzhavar puyalennum
Vaari VaLangundrik Kaal
விளக்கம்:
மழை என்னும் வருவாய் வளம் குன்றி விட்டால், உணவுப் பொருள்களை உண்டாக்கும் உழவரும் ஏர் கொண்டு உழமாட்டார். உழவுத் தொழில் குன்றி விடும்.
Explanation:
If the abundance of wealth imparting rain diminish, the labour of the plough must cease.
குறள் 15:
கெடுப்பதூஉம் கெட்டார்க்குச் சார்வாய்மற் றாங்கே
எடுப்பதூஉம் எல்லாம் மழை.
Translation:
'Tis rain works all: it ruin spreads, then timely aid supplies;
As, in the happy days before, it bids the ruined rise
Ketuppadhooum Kettaarkkuch ChaarvaaimaR Raange
eduppadhooum ellaam Mazhai
விளக்கம்:
பெய்யாமல் மக்களைக் கெடுக்கக் கூடியதும், பெய்வதன் காரணமாக கெட்டார்க்குத் துணையாய் நின்று காக்க வல்லதுமாகிய எல்லாம் அந்த மழையே ஆகும்.
Explanation:
Rain by its absence ruins men; and by its existence restores them to fortune.
குறள் 16:
விசும்பின் துளிவீழின் அல்லால்மற் றாங்கே
பசும்புல் தலைகாண்பு அரிது.
Translation:
If from the clouds no drops of rain are shed
'Tis rare to see green herb lift up its head.
visumpin thuLiveezhin allaalmaR Raange
pasumpul thalaikaaN paridhu
விளக்கம்:
வானத்திலிருந்து மழைத்துளி விழாது போனால், மண்ணில் பசும்புல்லின் நுனியைக்கூட இங்கே காண்பது அரிதான ஒன்றாகி விடும்.
Explanation:
If no drop falls from the clouds, not even the green blade of grass will be seen.
குறள் 17:
நெடுங்கடலும் தன்நீர்மை குன்றும் தடிந்தெழிலி
தான்நல்கா தாகி விடின்.
Translation:
If clouds restrain their gifts and grant no rain,
The treasures fail in ocean's wide domain.
Nedungatalum thanneermai kundrum thatindhezhili
thaannalkaa thaaki vitin
விளக்கம்:
மழை பெய்யும் தன் இயல்பிலிருந்து மாறி பெய்யாது போனால், பெரிய கடலும் தன்னுடைய இயல்பிலிருந்து மாறி கடல் நீர் வளம் குன்றி வற்றிப் போகும்.
குறள் 18:
சிறப்பொடு பூசனை செல்லாது வானம்
வறக்குமேல் வானோர்க்கும் ஈண்டு.
Translation:
If heaven grow dry, with feast and offering never more,
Will men on earth the heavenly ones adore
siRappodu poosanai sellaadhu vaanam
vaRakkumael Vaanoarkkum iiNdu
விளக்கம்:
மழை பொய்த்துப் போனால் வானவர்களுக்கு தினமும் நடக்கும் வழிபாடு எதுவும் நடக்காது; ஆண்டுதோறும் கொண்டாடப்படும் திருவிழாவும் நடைபெறாது.
குறள் 19:
தானம் தவம்இரண்டும் தங்கா வியன்உலகம்
வானம் வழங்கா தெனின்.
Translation:
If heaven its watery treasures ceases to dispense,
Through the wide world cease gifts, and deeds of 'penitence'.
Thaanam thavamiraNdum thangaa viyanulagam
vaanam vazhangaa thenin
விளக்கம்:
மழை பெய்யாமல் பொய்த்துப் போனால், பரந்துவிரிந்த இவ்வுலகத்தில் பிறர்க்கு செய்யும் தானமும், தன்னை உயர்த்த தன்பொருட்டு செய்யும் நோன்பும், தவமும் நடைபெறாது.
குறள் 20:
நீர்இன்று அமையாது உலகெனின் யார்யார்க்கும்
வான்இன்று அமையாது ஒழுக்கு.
Translation:
When water fails, functions of nature cease, you say;
Thus when rain fails, no men can walk in 'duty's ordered way'.
Neerindru amaiyaadhu ulakenin yaaryaarkkum
Vaanindru amaiyaadhu ozhukku
விளக்கம்:
உலகில் மழை நீர் இல்லையென்றால் ஒழுக்கமே கெடக்கூடும். எத்தனை பெரியவரானாலும் நீர் இல்லாமல் வாழமுடியாது. நீரின் தேவையை உணர்ந்து செயல்பட வேண்டும்.
Ещё видео!