இலவச* டிமேட் கணக்கைத் திறக்க: [ Ссылка ]
பங்குகளை எப்படி வாங்குவது என்று அறிந்திருந்தால் மட்டும் போதாது, அந்த பங்குகளை எப்போது எப்படி விற்க வேண்டும் என்பதையும் அறிந்திருக்க வேண்டும். ஒரு பங்கை விற்க மிக அடிப்படையான வழி விற்பனை ஆணை ஆகும். நீங்கள் ஒரு விற்பனை ஆணையை சமர்ப்பிக்கப்போகிறீர்கள் என்று தீர்மானித்தால், அது எவ்வகையானது என்பதை நீங்கள் முடிவு செய்ய வேண்டும். விற்பனை தொடர்பான ஆணைகளின் முக்கிய வகைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளது:
சந்தை ஆணை: இந்த ஆணைகள் தற்போதுள்ள சந்தை விலையில் விற்கப்படுகின்றன. இதன் நன்மை என்னவென்றால், ஆணைகள் உடனே செயல்படுத்தப்படுகின்றன. இதன் தீமை என்னவென்றால் தற்போது சந்தையில் வழங்கப்படும் மிகக் குறைந்த கொள்முதல் விலையையே நீங்கள் ஏற்க வேண்டும்.
வரம்பு ஆணை: இந்த ஆணைகள் ஏற்றுக்கொள்ளக்கூடிய குறைந்தபட்ச விலையில் நிர்ணயிக்கப்படுகின்றன. மேலும், வாங்குபவரின் சலுகை தொகைக்கு ஈடாகவோ அல்லது அதிகமாகவோ இருந்தால் மட்டுமே பங்குகள் விற்கப்படும். இதன் நன்மை என்னவென்றால், விற்பனையாளர் அதிக தொகை பெற இதில் உத்தரவாதம் இருக்கும். இதன் தீமை என்னவென்றால், இந்த ஆணைக்காக நீண்ட நேரம் காத்திருக்க நேரிடலாம்.
நிறுத்து ஆணை: விற்பனையாளரின் தீர்மானித்த விலைக்குக் குறைந்துவிட்டால் மட்டுமே இந்த ஆணைகள் பங்கை விற்கும். இதன் நன்மை என்னவென்றால், இது ஒரு பங்கு காப்பீட்டுக் கொள்கையாகும். நீங்கள் ஒரு பங்குக்கு ஏற்கத் தயாராக இருக்கும் மிகக் குறைந்த விலையை எட்டியவுடன், தானாகவே பங்கை விற்கலாம். இதன் தீமை என்னவென்றால், இந்த ஆணைகள் வழக்கமாக ஒரு மோசமான சூழ்நிலையின் போது தான் சமர்ப்பிக்கப்படுகின்றன. எனவே, நிறுத்த ஆணை சமர்ப்பிக்கப்பட்டால், ஏதோ தவறு நடந்திருப்பதாக அர்த்தம்.
நீங்கள் உங்கள் பங்குகளை நிதி ஆலோசகர் மூலமாகவும் விற்றிடலாம். மொபைல் செயலிகளைப் பயன்படுத்துபவராக இருந்தால், நீங்கள் சுலபமாக ஏஞ்சல் புரோக்கிங் மொபைல் டிரேடிங் ஆப்பைப் பயன்படுத்தி உங்கள் பங்குகளை உடனடியாக விற்றிடலாம். உடனே விற்க ஏஞ்சல் புரோக்கிங் மொபைல் டிரேடிங் ஆப்பைப் பதிவிறக்குங்கள்.
எங்களுக்கு சப்ஸ்கிரைப் செய்ய► [ Ссылка ]
ஏஞ்சல் புரோக்கிங் செயலியைப் பதிவிறக்குக: [ Ссылка ]
பங்கு/வர்த்தகம் தொடர்பான முக்கிய தகவல்களை அறிய:
வலைத்தளம்: [ Ссылка ]
பேஸ்புக்: [ Ссылка ]
ட்விட்டர்: [ Ссылка ]
லிங்க்ட்இன்: [ Ссылка ]
பங்குகளை விற்பது எப்படி? (0:08)
ஒரு பங்கை விற்பது எப்படி, பங்கை விற்பனை, பங்குகளை ஆன்லைனில் விற்க, ஏஞ்சல் புரோக்கிங் மொபைல் செயலியில் பங்கை விற்க, பங்குசந்தை, புரோக்கிங் மொபைல் செயலி, ஏஞ்சல் புரோக்கிங், , பங்குகள், டிரெடிங், ஆன்லைன் புரோக்கிங்
Ещё видео!