ஆஸ்துமா நோய்க்கு நிரந்தர தீர்வு மற்றும் காரணங்கள் .
Doctor.Sivananatnan M.B.B.S.,D.C.H.,M.S ( By research ) அவ்ரகளின் பதில்கள் ...
PLEASE | SHARE | COMMENT | AND SUBSCRIBE |
SUBCRIBE OUR CHANNEL :
[ Ссылка ]
TO Promote your videos contact : KATRATHUKAIALAVU@GMAIL.COM
ஆஸ்துமா என்பது சுவாசக்குழல்களை பாதிக்கும் ஒரு நோய். சுவாசக்குழல்கள் என்பது மூச்சுக் காற்றை நுரையீரலுக்குச் எடுத்துச் செல்லும் குழாய்கள் ஆகும். ஆஸ்துமா உள்ள நபர்களின் சுவாசக்குழாய்களின் உட்சுவர் வீக்கம் கண்டிருக்கும். இப்படிபட்ட வீக்கம் கண்ட சுவாசக்குழாயில் அலர்ஜி எனப்படும் ஓவ்வாமையை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ அல்லது மூச்சுக் குழாய்களில் எரிச்சலை ஏற்படுத்தக்கூடிய பொருட்களோ உதாரணமாக புகை, தூசி போன்றவை செல்லும்போது சுவாசக்குழாய்கள் இப்படிப்பட்ட பொருட்களுக்கு எதிராக செயல்படும்.
இப்படி சுவாசக்குழாய்கள் எதிரிடையாக செயல்படும் போது சுவாசக் குழாய்களின் உள் சுற்றளவு குறைந்து, சாதாரண அளவைவிட மிக குறைந்தளவு காற்றே நுரையீரலின் காற்றுப் பரிமாணம் நடக்கும் இடத்திற்கு செல்கிறது. சுவாசக் குழாய்கள் சுருங்குவதால், அதன் வழியாக காற்றுச் சென்றுவரும்போது அதிகமாக சத்தம் கேட்கிறது. மேலும், நம் உடலில் உள்ள திசுக்களுக்கு செல்லும் பிராண வாயுவின் அளவும் குறைகிறது.
இதன் விளைவாக, மிகுந்த சிரமத்துடன் மூச்சு விடும் நிலைமை, இருமல், மார்பு பகுதி இருக்கமாகுதல் மற்றும் சுவாசக்கோளாறு போன்றவற்றை உண்டாக்குகிறது. இவை அனைத்தும் குறிப்பாக இரவு மற்றும் அதிகாலை நேரங்களில் அதிகமாகக் காணப்படும்.
'சிட்ரிக் அமிலம்' நிறைந்த ஆரஞ்சு, கொய்யா, கிரேப்ஸ் பழங்கள் வேண்டாம். புளித்த தயிருக்கு 'குட்பை' சொல்லுங்கள், வெங்காயம், பூண்டு உணவில் சேர்த்துக் கொள்ளலாம். 1 1/2 டீஸ்பூன் நாட்டுச் சர்க்கரை, 2 துளி எலுமிச்சை, 2 துளசி இலை போட்டு தயாரிக்கப்பட்ட மூலிகை டீ அருந்தலாம். பிரிட்ஜில் வைத்த உணவுகள் வேண்டவே வேண்டாம்.
Ещё видео!