கும்பகோணம், பிப். 25 -
கும்பகோணத்தில் அரசு கவின்கலைக் கல்லூரியில் புதிய கட்டிடம் கட்டித்தர வலியுறுத்தி வகுப்புக்களை புறக்கணிப்பு செய்து மாணவ மாணவிகள் முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டதால் அங்கு பரபரப்பு நிலவியது.
தமிழகத்தில் கவின் கலைக் கல்லூரிகள் 2 செயல்படுகிறது 1 சென்னையிலும் மற்றொன்று கும்பகோணத்தில் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் இந்த கல்லூரியில் வரை கலை சிற்பக்கலை விசுவல் கம்யூனிகேஷன் என்ற மூன்று பாடப்பிரிவுகளில் 300க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் பயின்று வருகின்றனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இயங்கி வரும் அரசு கவின் கலைக்கல்லூரி கட்டப்பட்டு சுமார் 44 ஆண்டுகளுக்கு மேல் ஆன நிலையில் பிரதான கட்டிடம் வலுவிழந்து ஆங்காங்கே பெயர்ந்து விழுந்து கொண்டிருக்கிறது.
இது குறித்து மாணவர்கள் முதல்வர் அருளரசனிடம் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பு புகார் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படாத நிலையில், இன்று காலையில் காரை பெயர்ந்து விழுந்துள்ளது. அதிர்ஷ்டவசமாக மாணவ மாணவிகள் அப்பகுதியில் இல்லாததால் காயம் இன்றி தப்பி உள்ளனர்.
இதனால் ஆத்திரம் கொண்ட அக்கல்லூரியில் பயிலும் மாணாக்கர்கள் அரசு மற்றும் கல்லூரி நிர்வாகத்தின் மெத்தனப்போக்கைக் கண்டித்து திடீரென வகுப்பறைப் புறக்கணிப்பு போராட்டத்தில் ஈடுப்பட்டனர். இதனால் அக்கல்லூரி வளாகத்தில் பரபரப்பு நிலவியது.
மேலும் இது குறித்து மாணாக்கர்கள் குறிப்பிடுகையில் பெயர்ந்து விழும் சுவர் பூச்சு தங்கள் மேல் எப்போது விழுமோ என்ற பயத்தில் கல்லூரி வகுப்பறை செல்வதாகவும், தங்களுக்கு ஏதாவது நேர்ந்தால் தங்களது குடும்பத்தினர் பாதிக்கப்படுவார்கள் எனவும் குறிப்பிட்டார்கள்.
எனவே அரசு கலை பண்பாட்டு துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து இந்த கல்லூரிக்கு புதிய கட்டிடம் கட்டித்தர வேண்டும் என்றும் பழுதுபார்க்கும் பணிகள் ஆமை வேகத்தில் நடப்பதாகவும் துரிதமாக பணிகளை செய்து முடிக்க வேண்டும் என்றும் மாணவ-மாணவிகளுக்கு கழிப்பறை உள்பட அடிப்படை வசதிகள் முழுமையாக இல்லாததால் பெரும் அவதிப்பட்டு வருகின்றனர்.
எனவே தமிழக அரசு கலை பண்பாட்டுத்துறை உடனடியாக நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடமும் அடிப்படை வசதிகளையும் செய்து கொடுக்க வேண்டும் என்று வகுப்பு புறக்கணிப்பு செய்து கல்லூரி வாயில் முன்பு முற்றுகைப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.
தமிழக அரசு உடனே விரைந்து நடவடிக்கை எடுத்து புதிய கட்டிடம் கட்டித்தர கோரிக்கையும் வைத்துள்ளனர். மேலும் அதுவரை வகுப்புக்கு செல்ல மாட்டோம் எனவும் தெரிவித்தனர்.
பேட்டி சத்தியமூர்த்தி கல்லூரி மாணவர்
Ещё видео!