பாடுபவர்கள் ஸ்ரீமதி சீதாலக்ஷ்மி இராதாகிருஷ்ணன் குழுவினர்
தனாதன தனாதன தனாதன தனாதன
தனாதன தனாதனன தனதான
இலாபம் இல் பொலா உரை சொலா மன தபோதனர்
இயாவரும் இராவு பகல் அடியேனை
இராகமும் விநோதமும் உலோபமுடன் மோகமும்
இலான் இவனு மா புருஷன் என ஏய
சலாப அமலாகர சசீதர விதாரண
சதாசிவ மயேசுர சகல லோக
சராசர வியாபக பராபர மநோலய
சமாதி அநுபூதி பெற நினைவாயே
நிலாவிரி நிலாமதி நிலாதவ நிலாசன
நியாய பரிபால அர. நதி சூடி
நிசாசர குலாதிபதி ராவண புயாரிட
நிராமய சரோருகரன் அருள் பாலா
வில் ஆசுகம் வலார் எனும் உலாச இத ஆகவ
வியாதர்கள் விநோத மகள் மணவாளா
விராவு வயலார்புரி சிராமலை பிரான்மலை
விராலி மலை மீதிலுறை பெருமாளே.
Ещё видео!