#pradosham
#tiruvannamalai
#tamilnews
திருவண்ணாமலை கோவில் பங்குனி மாத பிரதோஷ வழிபாடு| Tiruvannamalai temple pradosham |
திருவண்ணாமலை: 19.03.2023
மஹா பிரதோஷம் அண்ணாமலையார் கோவில் பெரிய நந்திக்கு சிறப்பு அபிஷேகம்..! ஆயிரக்கணக்கான பக்தர்கள் தரிசனம்..!
பஞ்ச பூத தலங்களில் அக்னி தலமாகவும்... நினைத்தாலே முக்தி தரும் ஸ்தலமாகவும் விளங்க கூடிய திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் ஆயிரங்கால் மண்டபம் அருகே உள்ள பெரி நந்திக்கு மஹா பிரதோஷ விழா இன்று (19-03-2023) வெகு விமர்சையாக நடைபெற்றது.
பெரிய நந்திக்கு அரிசி மாவு, மஞ்சள், தூள் அபிஷேகத் தூள், பஞ்சாமிர்தம், தயிர், தேன், பன்னீர், இளநீர், சந்தனம், விபூதி மற்றும் பால் ஆகியவற்றைக் கொண்டு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றது. அதனைதொடர்ந்து நந்தி பகவானுக்கு அருகம்புல், வில்வ இலை, சாமந்திப்பூ, மல்லி, கனகாம்பரம் ஆகிய பூக்களால் மாலை அணிவித்து சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு பஞ்சமுக தீபாராதனையும் நடைபெற்றது.
பிரதோஷ தினத்தின் பொழுது நந்திவர்மனை வழிபட்டால் நினைத்த காரியங்களும், திருமண மற்றும் குழந்தைப்பேறு கிட்டும் என்பதும் மகா பிரதோஷத்தை வழிபட்டால், ஓராண்டு பிரதோஷ தினத்தை வழிபட்ட பலன் கிட்டும் என்பதும் ஐதீகம். இந்தமஹா பிரதோஷ விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் நேரில் கண்டு தரிசனம் செய்தனர்.
Ещё видео!