Naan Vaazhvadhu Umakkaaga by Asborn Sam
நான் வாழ்வது உமக்காக
உமது ஊழியம் செய்வதற்காக (2)
உமக்காக யாவையும் சகித்துக் கொள்வேனே
என் ஜீவனையும் பொருட்டாக நினைப்பதில்லையே (2)
நீர் தந்த ஊழியத்தை நிறைவேற்றிட- 2
ஆசையுடன் தினம் ஓடுகிறேன்- 2
1. உடைந்து போன எந்தன் கூடாரத்தையே
உமது கரத்தில் எடுத்து கட்டுவித்திரே (2) பாழானவைகளை சீர்படுத்திவிட்டீர்- 2
பயிர் நிலமாய் என்னை மாற்றிவிட்டீர்- 2
- உமக்காக
2. தொலைந்து போன என்னை தேடி வந்தீரே
உமது ஜீவன் கொடுத்து மீட்டுக் கொண்டீரே (2)
ஆகாதவன் என்று தள்ளின என்னை- 2
மூலைக்கு தலைக்கல்லாய் மாற்றி விட்டீரே- 2
- உமக்காக
#tamilchristiansonglyrics #christiansonglyrics
Ещё видео!