Arunagirinathar Movie Songs (1. Kandhar Alangaram 2.Vel Viruththam & 3.Mayil Viruththam).
அருணகிரிநாதர் திரைப்படப் பாடல்கள் (1.கந்தர் அலங்காரம் 2.வேல் விருத்தம் 3.மயில் விருத்தம்)
Song: sen kEzh aduththa | venG kaaLa kaNtar | Santhaana pushpa
Movie: Arunagirinathar
Singer: T. M. Soundarrajan
Lyrics: Arunagirinathar
Composer: G. Ramanathan & T. R. Pappa
Director: T. R. Ramanna
பாடல்: செங்கேழ் அடுத்த | வெங்காள கண்டர் | சந்தான புஷ்ப
படம்: அருணகிரிநாதர்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
பாடலாசிரியர்: அருணகிரிநாதர்
இசையமைப்பாளர்: G. இராமநாதன் T. R. பாப்பா
இயக்குனர்: T. R. ராமண்ணா
(திரு. அருணகிரிநாதர் அருளிய கந்தர் அலங்காரம் (பாடல் 104)):
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே!!
(திரு. அருணகிரிநாதர் அருளிய வேல் விருத்தம் (பாடல் 2)):
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே!!
(திரு. அருணகிரிநாதர் அருளிய மயில் விருத்தம் (பாடல் 1):
சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்
மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே!!
(மேலும் திரு. அருணகிரிநாதர் பாடல் வரிகளுக்கு:
[ Ссылка ])
(Kandhar Alangaram (Song 104) by Sri Arunagirinathar):
sen kEzh aduththa sina vadivElum thirumugamum
pangkE niraiththa nal panniruthOLum padhumamalark
kongkE tharaLam soriyum sengkOdaik kumaran ena
engkE ninaippinum angkE enmun vandhu edhir niRppanE!!
(Vel Viruththam (Song 2) by Sri Arunagirinathar):
venG kaaLa kaNtar kai chuulamunh thirumaayan
veRRipeRu chutar aalzhiyum
viputhar pathi kulichamum chuuran kulanG kalli
vellaa enak karuthiyae
chanGraama nheechayiththu aruLenath thaevarum
chathurmukanum nhinRirappa
chayilamotu chuuranutal orunotiyil uruviyae
thani aaNmai koNta nhetuvael
kanGkaaLi chaamuNti varaaki inhthraaNi
keLamaari kamalaachana
kanni nhaaraNi kumari thripurai payiravi amalai
keLari kaamaakshi chaiva
chinGkaari yaamaLai pavaani kaarththikai koRRi
thriyampaki aLiththa chelva
chiRuvan aRumukan murukan nhirutharkakaL kulaanhthakan
chempoRRirukkai vaelae!!
(Mayil Viruththam (Song 1) by Sri AruNagirinAthar):
Santhaana pushpa parimala kinkinimuga
Saranayugala amirthaprabha...
Chandirasekara mooshigaruda vegumogha
Sathya priyalingana...
Sindhamani kalasa karagadagapola
Thiriyambiga vinayagan mudhal...
Sivanai valam varum alavil
Ulagadaiya nodiyil varu
Chithira kalaaba mayilaam...
Mandhaagini prabha
Vadharanga vitharanga
Vana sarodhaya kirithika...
Varaputhira raajeeva
pariyanga thandhiya
Varaasalan kuzhisaayuthaththu...
Indhiraani maangalya
Thandhuratchabarana
Igal vel vinodhan arulkoor...
Imayakiri kumari maganaeru neelagriva
Rathna kalaaba mayilae
Rathna kalaaba mayilae
Rathna kalaaba mayilae!!
For more Sri Arunagirinathar's Songs Lyrics:
[ Ссылка ])
[ Ссылка ]
Ещё видео!