Ravana Thesathu Tamizha
ராவண தேசத்து தமிழா
A Vetti Sinthujan Musical
Lyrics & Direction - Vinoth
Singers : Vaheeshan , Vinoth , Vetti Sinthujan , Ramanan
Editor - Kvm Vithu
Producer : Vijayakumar & Kavash ( VK Brothers )
Dop - Kvm Vithu , Mugunth Vinu
#rtt #tamiltrending
பத்தாவது தடவையும் நிலத்தில் வீழ்ந்த தமிழனை முத்தமிட்டு சொன்னது பூமி
ஒன்பது தடவையும் எழுந்தவனல்லவா நீ.. எழுந்திடு தமிழா.. நீ..
நிமிர்ந்திடு திமிராய்..
வில்லிசை பாடிய காலங்கடந்து
சொல்லிசை பாடிட நேரங்கனிந்து
வல்லின மெல்லின வார்த்தைகளெல்லாம்
வில்லினில் புறப்பட்ட அம்புகளானது.
ஈசனை மயக்கிடும் வீணையை மீட்டிடும் ராவண தேசத்து தமிழனிவன்.
பாரினை போற்றிடும் பாக்களை சொரிந்திடும் ஈழத்து சொல்லிசைப் புலவனிவன்.
பரி மீது ஏறி அன்று
பார் எங்கும் போர்கள் தொடுத்த கூட்டம்
நரி போல நெஞ்சம் அஞ்சி நாம் என்றும் விலைக்கு போக மாட்டோம்.
சகுனிகள் ஆடுற ஆட்டத்திற்கு உன் பகுதியில் தவறுகள் தேவையில்லை.
நல்லவன் என்கிற நரிகளெல்லாம் நம்மள மாட்டுது சகதியில.
கரிகாலன் கதைகள் எல்லாம்
வரலாறு சொல்லும் பொழுது
திமிரேறும் எந்தன் குருதி
பார் வெல்வோம் என்றும் உறுதி.
பாரத கதைதனை எழுதிடவே தந்தம் முறித்தவன் துணையிருக்கு.
பாரினை வென்றிடலாம் தமிழா நீ. பா என்னும் அம்பை செலுத்து.
வேழம் கொண்ட சோழப் பரம்பரை எமை வீழ்த்த நினைப்பது மடமைத்தனம்.
வீழ்ந்தாலும் மீண்டெழுந்திடுவோம் என்று நாங்க நினைப்பது வீரத்தனம். நம் வீரத்தனம்.
இலக்கியம் அடுக்கி நீ பாரு இந்த இமயமும் தோற்றுத்தான் போகும்
முழு மதியென மின்னிடும் மங்கையின் அஞ்சிடா வீரத்தைப் பாடு.
தமிழே தமிழே எனது உயிரே..
உனக்கு நிகராய் எதுவும் இல்லையே.
புகழே புகழே எங்கும் புகழே.
வானமே உனக்கு என்றும் எல்லையே.
நான் ஜனித்தது வன்னிக்காடு தமிழன் என்று நீ சொல்லிப் பாரு
எண்ணித் திமிருடன் நீ மெட்டுப் போடு.
நாவில் இல்லை தமிழுக்கு தட்டுப்பாடு..
கந்தக புகையில கடற்கரை மணலில மூழ்கி எழுந்திட்ட மூத்தகுடி.
செந்தமிழ் வளர்த்திட சேனைகள் சாய்த்திட சேர சோழர்கள் விட்ட அடி.
வறுமையின் குடையில
திறமைகள் மறையுது
ஒரு பிடி சோற்றில பசிகளும் கரையுது..
எதிரியின் சதியில தலைகளும் உருளுது
மழலையின் மொழியில கவலையும் கரையுது.
சிலைவீறு கொண்டாலும் உளி அதற்கு அஞ்சாது
தலைசீவிச் சென்றாலும் கலைத்தாகம் தீராது.
அன்னைத் தமிழே செல்லத் தமிழே சங்கம் வளர்த்த நம் சிங்கத் தமிழே..
ஆதித் தமிழே அழகுத் தமிழே எட்டுத்திசையும் நம் வெற்றிக் கொடியே..
அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு
ஆதித் தமிழினம்
என்றொரு செருக்கு..
எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும் விண்தனைப் பிளந்திடும் செம்மொழித் தமிழ்.
பொழுது புலர்ந்திட
பகலவன் ஒளிர்ந்திட
கவி ஒன்று வடித்தேன்
கம்பன் வழி வந்த செல்லப்பிள்ளை..
நான் கம்பன் வழி வந்த செல்லப்பிள்ளை..
பட்ட விறகிலும் பசுந்தளிர் முளைத்திட இலக்கியம் செம்மிய பல கதை உண்டு.
கண்ணகி மதுரையை எரித்தாள் அன்று
கரிகாலன் சதியால் வீழ்ந்தான் என்றும்.
வேற்று தேசம் சென்றாலும் கீற்றாய் வீசும் தமிழ் வாசம்.
வேட்டி கட்டிச் சென்றிடுவான் நம் வெற்றித்தமிழனின் அடையாளம்.
எழுந்திடு எழுந்திடு தமிழா நீ..
நிமிர்ந்திடு நிமிர்ந்திடு திமிராய்..
விரைந்திடு விரைந்திடு புயலாய்.
நீ கலந்திடு கலந்திடு உயிராய்.
பசித்தாலும் வேங்கை என்றும் புசிக்காது
புல்லை
மரித்தாலும் நம் புகழை இனி மறக்காது லங்கை..
எல்லாளன் வழி வந்த சொல்லாடும் குழந்தை வென்றாடும் தமிழை கொண்டாடும் திசை எங்கும்
#rtt #Vaaheesan #tamiltrending
@lovleyvinoth
[ Ссылка ]
Lovleyvinoth@gmail.com
@harikaran_kavaskar
[ Ссылка ]
#Ravana_thesathu_Tamizha #MusicVideo #tamilsong #Tamil #TamilRap #TamilSong #Vaheesan #VKBrothers #VMFilmMakers #kvmcreationstudio #Rythmstudio #KurinchiCreations #BenraFilms
Ещё видео!