#thirupavai #thiruvempavai #thiruvembavai #திருப்பாவை #திருவெம்பாவை
திருவெம்பாவை - 17
செங்கண் அவன்பால் திசைமுகன்பால் தேவர்கள்பால்
எங்கும் இலாதோர் இன்பம் நம்பாலதாக்
கொங்கு உண் கருங்குழலி நந்தம்மை கோதாட்டி
இங்கு நம் இல்லங்கள் தோறும் எழுந்தருளிச்
செங்கமலப் பொற்பாதம் தந்தருளும் சேவகனை
அங்கண் அரசை அடியோங்கட்கு ஆரமுதை
நங்கள் பெருமானைப் பாடி நலம் திகழ்ந்
பங்கயப் பூம்புனல் பாய்ந்தாடேலோர் எம்பாவாய்.
திருப்பாவை - 17
அம்பரமே, தண்ணீரே, சோறே அறஞ்செய்யும்
எம்பெருமான்! நந்தகோ பாலா! எழுந்திராய்;
கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே! குலவிளக்கே!
எம்பெரு மாட்டி! யசோதாய்! அறிவுறாய்;
அம்பரம் ஊடறுத் தோங்கி உலகளந்த
உம்பர்கோ மானே! உறங்காது எழுந்திராய்;
செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா!
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்.
மார்கழி மாதம் முழுவதும் திருப்பாவை, திருவெம்பாவை மற்றும் திருப்பள்ளியெழுச்சி பாடல்களை ஆத்ம ஞான மையம் வழங்குகிறது. தொடர்ந்து அனைத்து வீடியோக்களையும் பார்ப்பதற்கு இந்த சேனலை Subscribe செய்து கொள்ளுங்கள்.
ஆத்ம ஞான மையம்
Ещё видео!