Join this channel to get access to perks:
[ Ссылка ]
மாதா, பிதா, குரு, தெய்வம் என்பார்கள். உலகில் தாய் தந்தையருக்கு அடுத்த இடத்தை குருவுக்குத் தந்திருக்கிறார்கள். அதன் பிறகுதான் தெய்வம் என்கிறார்கள். நம்முடைய கர்மவினைகள் தீருவதற்காக நாம் பிறவி எடுக்க நேரிடுகிறது. அதற்குக் காரணமாக இருப்பவர்கள் நம் பெற்றோர். அதனால்தான் அவர்களை முதலில் வைத்துச் சொல்லி இருக்கிறார்கள். ஆனால், அவர்கள் நம்மைப் பெற்றதின் நோக்கம், நாம் நெறிமுறைகளுடன் வாழ்ந்து, வினைகளைக் களைந்து, இறைவனின் திருவடிகளைச் சேர்ந்து, பிறவாப் பேரின்ப நிலையை அடையவேண்டும் என்பதுதான்.
அப்படி நாம் நெறிமுறைகளுடன் வாழவேண்டுமானால், நெறிமுறைகளை நமக்கு உபதேசிக்கவும், ஆன்மிக சாதனைகளில் நாம் முன்னேறவும் நமக்கு ஒரு குருவின் தேவை ஏற்படுகின்றது. அவர்தான் நமக்கு நெறிமுறைகளை கற்றுத்தேறவும், ஆன்மிக சாதனைகளில் நாம் முன்னேறவும் துணை நிற்கிறார்.
ஆனால், இன்றைக்கு பெரும்பாலானோர் தவறான நபர்களைத் தங்களின் ஆன்மிக குருவாக ஏற்றுக்கொண்டு, அதன் விளைவாக பெரும் அவதிகளுக்கு ஆளாகிறார்கள்.
Ещё видео!