சனி வக்ர நிலை முடிகிறது சுபம்பெறும் ராசிகள்.
சனி வக்ரம் அடைதல் என்பது அவர் பின்னோக்கி சஞ்சாரம் செய்வது ஆகும். சனி பகவான் கும்ப ராசியில் இருந்து வக்கிரமடைவதால் சனிப்பெயர்ச்சியால் யாருக்கெல்லாம் பாதிப்பாக இருந்ததோ அவர்களுக்கு சில நன்மைகளையும் யாருக்கெல்லாம் சாதகமாக இருந்ததோ அவர்களுக்கு சில பாதிப்பு உண்டாக வாய்ப்புகள் அதிகம். ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை சனிபகவான் வக்கிரமாக செல்வதனால் 12 ராசிக்காரர்களுக்கும் ஏற்படும் பலன்களைப் பார்க்கலாம்.
சனிதான் ஆயுள் காரகன். சனிதான் தொழில் காரகன். சனிதான் நீதி,நேர்மை,தெய்வீக ஞானத்துக்கும் அதிபதி. ஒருவன் சுறுசுறுப்பாக செயல்படுவதற்கும் சோம்பேறியாக தூங்குவதற்கும் காரணம் அவன் ஜாதகத்தில் சனியின் பலமே ஆகும். ஒரு ராசியில் அதிக காலம் தங்கியிருந்து பலன்கள் பாதிப்புகளை ஏற்படுத்தக்கூடிய கிரகம் சனி. இரண்டரை ஆண்டுகாலம் ஒரு ராசியில் தங்குகிறார்.
சூரியனுக்கு 251 டிகிரியில் சஞ்சரிக்கும் போது வக்ரம் பெற்று 109 இருக்கும் போது வக்ர நிவர்த்தியடைவார். சுமார் 140 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கும். இதனை எளிதாக அறிய சூரியனுக்கு 9ல் சனி வரும் போது வக்ரம் பெறுகிறார் சூரியனுக்கு 5ல் சனி வரும் போது வக்ர நிவர்த்தியடையும். கும்ப ராசிக்கு அதிசாரமாக சென்ற சனிபகவான் மீண்டும் பின்னோக்கி நகர்கிறார். ஜூன் 5ஆம் தேதி முதல் அக்டோபர் 23ஆம் தேதி வரைக்கும் சுமார் 141 நாட்கள் வக்ரகதியில் சஞ்சரிக்கப்போகிறார் சனிபகவான். சனி பெயர்ச்சியால் பாதிப்பு ஏற்பட்ட ராசியினருக்கு தொழிலில் இருந்து வந்த பாதிப்புகள் குறையும். பணக்கஷ்டம் தீரும். பகை விலகி நிம்மதி உண்டாகும். கடுமையான நெருக்கடியில் இருந்து வந்தவர்களுக்கு ஒரு நிம்மதி கிடைக்கும் காலமாக இந்த மாதங்கள் அமையும்.
சனி வக்ர பெயர்ச்சியால் மேஷம் முதல் மீனம் வரை எந்த ராசிக்காரர்களுக்கு என்ன பலன் கிடைக்கும் என்று பார்க்கலாம்.
#வக்ரசனி2022
#சனிமஹாபார்வை
#சனிபலன்கள்2022
#சனிதிசை12ராசி
#12ராசிகபலன்
Ещё видео!