Latest Women's day Special song 2019
Song: Pennindri Amaiyaathu
Music: Aaveykannan
Singer: Aravind K & Juliana (Rap)
Lyrics: Xavier
Chorus: Jessy, Nisha,Joyce, Kavya
Sound Mixing: Subu Siva @ Wavss
Creative Head: Parthiban-Yogeshwar-K R Prasanth
Camera-Video Editing- Recording: Aaveykannan
If you want minus one track, please call me: 9941045991
பல்லவி
பெண்ணின்றி அமையாது உலகு
பெண் என்று சொன்னாலே அழகு
உயிரோடு உயிராக..
உறவோடு உறவாக..
தோளோடு தோளாக
மனதோடு மனதாக
பெண்தானே இல்வாழ்வின் விளக்கு - அவள்
ஆனந்தம் நம் வாழ்வின் இலக்கு..
1
மங்கையவள் தங்கையென
புன்னகையும் தருவாள்
தோள்சாயும் தோழியென
ஆறுதலும் தருவாள்
வீரத்தை விதைக்கின்ற
பாரதியின் குரலாய்
புதுமைகள் புரிகின்ற
புதுமைப்பெண் ஆவாள்
கோரஸ் :
பெண்மையைப் போற்றிடு, தேசமே
பெண்மையைப் போற்றிடு.
புன்னகை பூத்திடு , தேசமே
புன்னகை பூத்திடு
பெண்ணின்றி பூலோகம் இல்லை
பூமிக்குப் புன்னகையும் இல்லை
Rap
படிக்காம ஒதுக்கி வெச்ச
பழங்காலம் போச்சு,
அடக்காம அடக்கி வெச்ச
வரலாறும் போச்சு.
அடுப்பூதும் காலமெல்லாம்
அடியோடு போச்சு
கம்ப்யூட்டர் கையோடு
பெண்காலம் ஆச்சு
தில்லான வெற்றிதனை
சொல்லாமல் பெறுவோம்
கல்லான மாந்தருக்கும்
நல்லன்பை தருவோம்
ஆணுக்குப் பெண்ணவள்
தாழ்வாக இல்லை
தோளோடு தோளானால்
தோல்விகளும் இல்லை
2nd Charanam
உயிருக்குள் உயிரொன்றை
உயிரூற்றி வளர்ப்பாள்,
கண்ணுக்குள் கண்ணாக
காப்பாற்றி வளர்ப்பாள்
திரைகடலும் தாண்டியவள்
வரலாற்றைப் படைப்பாள்
லட்சியத்தின் உச்சிதனை
நிச்சயமாய் அடைவாள்
பெண்ணின்றி தாய்மையும் இல்லை
பூமிக்கு மேன்மையும் இல்லை.
கோரஸ் :
பெண்மையைப் போற்றிடு, தேசமே
பெண்மையைப் போற்றிடு.
புன்னகை பூத்திடு , தேசமே
புன்னகை பூத்திடு
Ещё видео!