[ Ссылка ]
#damodarastakam #lyrics #tamilgita #tamilgeetha #karthick #iskcon
#Damodhar #Ashtakam #lyrics #meaning
ஸ்ரீ தாமோதர அஷ்டகம்: ஸ்ரீ கிருஷ்ண துவைபாயண வியாசரால் எழுதப்பட்ட பத்ம புராணத்திலிருந்து எடுக்கப்பட்டது. ஸ்ரீ நாரதமுனி மற்றும் சௌனக ரிஷியின் மத்தியில் சத்தியவிரத முனிவரால் பாடப்பட்டதாகும்.
தாமோதர பூஜை: பாலகிருஷ்ணர் வெண்ணெய்த் திருடி, தாய் யசோதாவால் உரலில் கட்டப்பட்ட தாமோதரலீலை நிகழ்ந்த கார்த்திகை(தாமோதர) மாதத்தில் நெய் தீபமேற்றி பகவானுக்கு ஆரத்தி எடுப்பது சிறப்பாகும்.
ஸ்ரீ கிருஷ்ணரின் படங்கள் பதிவிறக்கம் செய்வதற்கான இணைப்பு (To Download Sri Krishna’s Images Link)
[ Ссылка ]
ஸ்ரீ தாமோதர அஷ்டகம் பாடல் மற்றும் பொருளுடன் (Shri Dhamodhar Ashtakam with meaning)
[ Ссылка ]
தாமோதர பூஜை (Dhamodhar Pooja Procedure)
[ Ссылка ]
துளசி ஆரத்தி (Tulsi Aarti Procedure)
[ Ссылка ]
துளசி ஆரத்தி -பஜனை பாடல்👇
[ Ссылка ]
ஆரத்தி காண்பிக்கும் முறை:
இந்த தாமோதர மாதத்தில் ஒவ்வொரு நாளும் பகவான் தாமோதர கிருஷ்ணருக்கு காலையிலோ, மாலையிலோ அல்லது இரண்டு நேரங்களிலுமோ நெய் தீப ஆரத்தி காட்டவேண்டும். பகவான் தாமோதர கிருஷ்ணரின் படத்தின் முன்பு அகல் விளக்கைக் கொண்டு நெய்தீபம் ஏற்றி பகவானின்
• பாதத்தில் 4 முறையும்,
• வயிற்றுப்பகுதியில் 2 முறையும்,
• முகத்தில் 3 முறையும் அதன்பிறகு
• முழு திருமேனிக்கும் சேர்த்து 7 முறையும்
இடமிருந்து வலமாக (Clock vice) ஆரத்தியைக் காண்பிக்க வேண்டும். அவ்வேளையில் குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஹரே கிருஷ்ண மஹா மந்திரத்தை பாடுவது மிகவும் மங்களத்தை கொண்டு சேர்க்கும். சத்ய விரத முனிவர் இயற்றிய தாமோதர அஷ்டகத்தைப் பாடுவது கூடுதல் விசேஷம். (குடும்ப உறுப்பினர்கள் ஒவ்வொருவருவரும் தனி விளக்கைப் பயன்படுத்துவது சிறப்பு)
அனுஷ்டிக்கும் வழிமுறை
அதிகாலை பிரம்ம முகூர்த்த நேரத்தில் (சூரிய உதயத்திற்கு 1 1/2 மணி நேரத்திற்கு முன்பு) எழுந்து ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை ஜபம் செய்ய வேண்டும்.
உயர்ந்த வைஷ்ணவர்களின் சங்கத்தில் தினமும் பகவத்கீதை ஸ்ரீமத் பாகவதத்தைக் கேட்க முயற்சி செய்தல் நன்று. கார்த்திகை மாதத்தில் தினமும் ஸ்ரீமத் பாகவதத்தைப் படிப்பதன் மூலம் 18 புராணங்களையும் படித்த பலனை அடைய முடியும்.
ஜபம் செய்யும் போதும், கீர்த்தனத்தின் போதும் கிருஷ்ணரின் திருநாமத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டும். ஹரே கிருஷ்ண மஹாமந்திரத்தை அதிகமாக ஜபம் செய்வதும், குடும்பத்தினருடன் இணைந்து கீர்த்தனம் செய்வதும் சிறந்தது.
துளசி தேவிக்கு தினமும் ஆரத்தி செய்து கீர்த்தனம் பாடி, நீர் ஊற்றி வழிபடவேண்டும்.
தினமும் சுவையான பதார்த்தங்களை செய்து ஸ்ரீ கிருஷ்ணருக்கு நைவேத்தியம் செய்யலாம்.
Ещё видео!