michaelsamraj@gmail.com
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
to support, phone pay : 9443559470
பல்லவி
சுந்தரப் பரம தேவ மைந்தன் ஏசுக் கிறிஸ்துவுக்குத்
தோத்திரம், புகழ்ச்சி நித்திய கீர்த்தனம் என்றும்!
அனுபல்லவி
அந்தரம்[1] புவியும் தந்து, சொந்த ஜீவனையும் ஈந்து
ஆற்றினார்; நமை ஒன்றாய் கூட்டினார்; அருள் முடி
சூட்டினார்; கிருபையால் தேற்றினாரே, துதி - சுந்தரப்
சரணங்கள்
1. பாதகப் பசாசால் வந்த தீதெனும் பவத்தால் நொந்த
பாவிகளான நமை உசாவி[2] மீட்டாரே;
வேத பிதாவுக் குகந்த ஜாதியாகக் கூட்டவந்த
மேசியாவைப் பற்றும் விசு வாச வீட்டாரே,
கோதணுகா[3] நீதிபரன் பாதமதின் ஆதரவில்
கூடுங்கள்;-பவத்துயர்
போடுங்கள்;-ஜெயத்தைக் கொண்
டாடுங்கள், துதிசொல்லிப் பாடுங்கள், பாடுங்கள் என்றும் - சுந்தரப்
2. விண்ணிலுள்ள ஜோதிகளும், எண்ணடங்காச் சேனைகளும்
விந்தையாய்க் கிறிஸ்துவைப் பணிந்து போற்றவே,
மண்ணிலுள்ள ஜாதிகளும் நண்ணும் பல பொருள்களும்
வல்லபரன் எனத் துதி சொல்லி ஏத்தவே,
அண்ணலாம் பிதாவுக் கொரே புண்ணியகுமாரனைக்கொண்
டாடிட,-அவர் பதம்
தேடிட,-வெகு திரள்
கூடி டத்துதிபுகழ் பாடிடப், பாடிட என்றும் - சுந்தரப்
3. சத்தியத் தரசர்களும் வித்தகப் பெரியார்களும்
சங்கத்தோர் களுங்கிருபை தங்கி வாழவே,
எத்திசை மனிதர்களும் பக்தர் விசுவாசிகளும்
ஏக மிகுஞ் சமாதான மாக வாழவே,
உத்தம போதகர்களும் சத்யதிருச் சபைகளும்,
உயர்ந்து-வாழ, தீயோன்
பயந்து-தாழ, மிக
நயந்து கிறிஸ்துவுக்கு ஜெயந்தான், நயந்தான் என்றும் - சுந்தரப்
- மரியான் உபதேசியார்
[1] வானம்
[2] தேடி
[3] குற்றமற்ற
86 கீர்த்தனை | சுந்தரப் பரம தேவ | Sundaraparama Deva | composer thought | michael samraj
Ещё видео!