பச்சை பதிகம் | திருநள்ளாறு | போகமார்த்த பூண்முலையாள் | திருஞானசம்பந்தர் தேவாரம்
திருநள்ளாறு பச்சைப் பதிகம்
இறைவர் திருப்பெயர் : தர்ப்பாரண்யேஸ்வரர், திருநள்ளாற்றீசர்
இறைவியார் திருப்பெயர் : போகமார்த்த பூண்முலையாள், பிராணாம்பிகை
திருமுறை : முதல் திருமுறை 49 வது திருப்பதிகம்
அருளிச்செய்தவர் : திருஞானசம்பந்த சுவாமிகள்
திருஞானசம்பந்தரின் இத்தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்று தொடங்கும் பதிகம் "பச்சைப் பதிகம்" என்ற சிறப்புடையது.
சம்பந்தரை மதுரையில் சமணர்கள் வாதிற்கு அழைத்தனர். அனல் வாதம் மற்றும் புணல் வாதம் செய்வது என்றும் அதில் வெல்பவர் சமயமே உயர்ந்தது என்று மதுரை மன்னர் முன்னிலையில் தீர்மானிக்கப்பட்டது. அதன்படி சமணர்கள் தங்கள் சமயக் கருத்துக்களை ஒரு ஏட்டில் எழுதி அதை தீயில் இட்டனர். ஏடு தீயில் எரிந்து சாம்பலாயிற்று.
அதன் பின் சம்பந்தர் முறை வரும் போது அவர் திருமுறை ஏட்டில் கயிறு சார்த்தி பார்த்த போது திருநள்ளாறு தலத்திற்கான "போகமார்த்த பூன்முலையாள்" என்ற பதிகம் வந்தது. சம்பந்தர் அதை தீயில் இட்டார். ஏடு தீயில் கருகாமல் பச்சை ஏடாகவே இருந்தது. சமணர்கள் வாதில் தோற்றனர். மதுரை மன்னனும் சமண சமயத்தில் இருந்து சைவ சமயத்திற்கு மாறினான். இவ்வாறு பாண்டிய நாட்டில் சைவம் தழைக்க காரணமாக இருந்த பதிகம் பெற்ற பெருமையை உடையது திருநள்ளாறு தலம்.
#பச்சைபதிகம்
#திருநள்ளாறு
#போகமார்த்தபூண்முலையாள்
#திருஞானசம்பந்தர்தேவாரம்
#sridharbaranyeswarartemple
#thirunallaru
#thirugnanasambantharpathigam
#saniswarar
#சனிஸ்வரர்கோவில்
ஏழரை சனியிலிருந்து விடுபட ஓத வேண்டிய பாடல்.
Ещё видео!