சொர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம்(Swarna Akarshana Bhairava Ashtakam), சொர்ண பைரவர் அஷ்டகம், ஸ்வர்ணாகர்ஷண பைரவர் அஷ்டகம், ஸ்வர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம்
64 பைரவர்களில் செல்வத்தை வாரி வழங்கக் கூடியவர் ஸ்ரீ சொர்ண ஆகர்ஷண பைரவர் ஆவார், இவரை தொடர்ந்து வழிபாடு செய்து வந்தால் பொருளாதார சிக்கல்கள் தீர்ந்து அளவில்லா நன்மைகளை அள்ளிக்கொடுப்பார்.
அகத்தியர் பெருமான் அருளிய செல்வம் கொழிக்க சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் பற்றிய விரிவன பதிவை நாம ஏற்கனவே சில வருடங்களுக்கு முன் வெளியிட்டு இருந்தோம் அதை பின்பற்றும் பல அன்பர்கள் ஸ்ரீ துர்க்கை சித்தரின் சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகம் பதிவிடுமாறு கேட்டிருந்தனர்.
செல்வம் கொழிக்க சுவர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரம் - அகத்தியர் அருளியது - [ Ссылка ]
[ Ссылка ] - ₹. 295 + Free Shipping சொர்ண ஆகர்ஷண பைரவர் யந்திரம் ஆர்டர் செய்ய இந்த லிங்கை கிளிக் செய்யவும்
இந்த சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகத்தை தினமும் ப்ரம்மமுகூர்த்தத்திலோ அல்லது மாலை 6மணி முதல் 7 மணிக்குள் 8 ஒருமுறையேனும் மனதார வேண்டி படித்துவந்தால் தீராத கடன்களும் தீரும், நவகிரஹங்களால் ஏற்படும் அனைத்து தோஷங்களும் விலகும், தொழில் மேம்படும், செல்வம் கொழிக்கும், வாழ்வில் சுபிட்சம் பெருகும். தினமும் 8 முறை பாராயணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
தேய்பிறை அஷ்டமி திதி, வளர்பிறை அஷ்டமி திதி அல்லது ஞாயிற்றுக்கிழமை மாலை ராகு கால நேரம், வெள்ளிக்கிழமை, திங்கட்கிழமை,பௌர்ணமி, அமாவாசை இவற்றில் அகத்தியர் பெருமானின் சொர்ண ஆகர்ஷண பைரவர் மந்திரத்துடன் இந்த சுவர்ண ஆகர்ஷண பைரவர் அஷ்டகத்தையும் சேர்த்து பாராயணம் செய்து வழிபடுவது மிகவும் சிறப்பு.
தனம் தரும் வயிரவன் தளிரடி பணிந்திடின் தளர்வுகள் தீர்ந்து விடும்
மனம் திறந்து அவன் பதம் மலரிட்டு வாழ்த்திடின் மகிழ்வுகள் வந்து விடும்
சினம் தவிர்த்து அன்னையின் சின்மயப்புன்னகை சிந்தையில் ஏற்றவனே
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
வாழ்வினில் வளந்தர வையகம் நடந்தான் வாரியே வழங்கிடுவான்
தாழ்வுகள் தீர்ந்திட தளர்வுகள் மறைந்திட தானென வந்திடுவான்
காழ்ப்புகள் தீர்த்தான் கானகம் நின்றான் காவலாய் வந்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
முழுநிலவதனில் முறையோடு பூசைகள் முடித்திட அருளிடுவான்
உழுதவன் விதைப்பான் உடமைகள் காப்பான் உயர்வுறச் செய்திடுவான்
முழுமலர்த் தாமரை மாலையை ஜெபித்து முடியினில் சூடிடுவான்
தனக்கிலை யீடு யாருமே என்பான் தன மழை பெய்திடுவான்
நான்மறை ஓதுவார் நடுவினில் இருப்பான் நான்முகன் நானென்பான்
தேனினில் பழத்தைச் சேர்த்தவன் ருசிப்பான் தேவைகள் நிறைத்திடுவான்
வான்மழை எனவே வளங்களைப் பொழிவான் வாழ்ந்திட வாழ்த்திடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பூதங்கள் யாவும் தனக்குள்ளே வைப்பான் பூரணன் நானென்பான்
நாதங்கள் ஒலிக்கும் நால்வகை மணிகளை நாணினில் பூட்டிடுவான்
காதங்கள் கடந்து கட்டிடும் மாயம் யாவையும் போக்கிடுவான்
தனக்கில்லையீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
பொழில்களில் மணப்பான் பூசைகள் ஏற்பான் பொன்குடம் ஏந்திடுவான்
கழல்களில் தண்டை கைகளில் மணியணிகலனாய் இருந்திடுவான்
நிழல் தரும் கற்பகம் நினைத்திடப் பொழுந்திடும் நின்மலன் நானென்பான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
சதுர்முகன் ஆணவத் தலையினைக் கொய்தான் சத்தொடு சித்தானான்
புதரினில் பாம்பைத் தலையினில் வைத்தான் புண்ணியம் செய்யென்றான்
பதரினைக் குவித்து செம்பினை எரித்தான் பசும்பொன் இதுவென்றான்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்
ஜெய ஜெய வடுகநாதனே சரணம் வந்தருள் செய்திடுவாய்
ஜெய ஜெய சேத்திர பாலனே சரணம் ஜெயங்களைத் தந்திடுவாய்
ஜெய ஜெய வயிரவா செகம் புகழ் தேவா செல்வங்களைத் தந்திடுவாய்
தனக்கில்லை யீடு யாருமே என்பான் தனமழை பெய்திடுவான்.
#aalayamselveer #swarnaakarshanabhairavashtakam
Ещё видео!