Movie:Vairanenjam
Music Director:MSV
Singers:TMS-P.Suseela
Uploaded By: Digital iMpress Music
========================================
Senthamizh Paadum Song Lyrics
========================================
ஆண்:செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்..ணே
தேரினில் வந்தது கண்ணே
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே கண்..ணே
தேரினில் வந்தது கண்ணே...
தென் மலை மேகம் தூதுவனாக
என்னிடம் சேர்த்தது உன்னை கண்...ணே
என்னிடம் சேர்த்தது உன்னை...
Uploaded By: @Shanthi20
பெண்:ஆஹா... ஆஹா... ஆஹா... ஆஹா...
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
முந்நூறு வைரங்கள் பொன் மாலை சூடும்
பூ மாது பண் பாடினாள்
பூச்சூடி கொண்டாடினாள்
ஆண்:பறவைகளின் ஒலியமுதம்
பருவமகள் இசை அமுதம்
பாராட்ட நீராடினாள்
தாலாட்ட உனைத் தேடினாள்
பெண்:செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணா கண்..ணா
தேரினில் வந்தது கண்ணா...
ஆண்:கல்யாண மன்றங்கள் கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் எந்நாளடி....
நல்வாக்கு சொல்வாயடி
கல்யாண மன்றங்கள் கண் காட்சி கண்டேன்
நம் வாழ்வில் எந்நாளடி
நல்வாக்கு சொல்வாயடி
பெண்:அருகில் வரும் தருமதுரை
உறவுதரும் புதிய கலை
ஆனந்தம் அந்நாளிலே என் மேனி உன் மார்பிலே
ஆண்:செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்...ணே
பெண்:செவ்வந்திப் பூமீது வெண் நீல வண்டு
ஜில்லென்று நீராடுது சிந்தாமல் தேனூறுது
ஆண்:பதுமையுடன் புதுமை மது
பசி அறியும் இளமை நதி
பாலூட்ட நீயில்லையா...சீராட்ட நானில்லையா
செந்தமிழ் பாடும் சந்தனக் காற்று
தேரினில் வந்தது கண்ணே
பெண்:கண்..ணா தேரினில் வந்தது கண்ணா...
Ещё видео!