கண்ணீரால் நன்றி சொல்கிறேன்
தேவா கணக்கில்லா நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
நன்றி நன்றி அய்யா இயேசையா
பல கோடி நன்மை செய்தீரே
தயவாய் என்னை உயர்த்தினீரே
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
தாயின் கருவில் தெரிந்து கொண்டீர்
உள்ளங்கையில் வரைந்து வைத்தீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
உந்தன் சிறகால் மூடி மறைத்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
கால்கள் இடராமல் பாதுகாத்தீர்
கண்மலையின் மேல் என்னை நிறுத்தினீர்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
சிலுவையில் எனக்கு ஜீவன் தந்தீர்
உந்தன் அன்பை என்ன சொல்லுவேன்
பாவமெல்லாம் போக்கினீரே சாபமெல்லாம் நீக்கினீரே
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன்
உந்தன் அன்பை எண்ணி பாடுவேன் – நன்றி நன்றி அய்யா
Ещё видео!