பக்தர்கள் மகிழ்ச்சி
காஞ்சிபுரம் ஏகாம்பரநாதர் கோயிலில்
தல விருட்சமாக மாமரம் உள்ளது.
பல ஆண்டாக கனிகள் தந்த
கோயில் மாமரம் 2004ல் பட்டுப்போனது.
அம்மரத்தின் திசுக்களை வைத்து,
மரபணு தொழில்நுட்பத்தின் மூலம்
புதிய மாங்கன்றை உருவாக்கி
2008ல் மீண்டும் அதே இடத்தில்
அறநிலையத்துறையினர் நட்டனர்.
மாங்கன்று வளர்ந்து மரமாகி
தற்போது காய்த்து குலுங்குகிறது.
மாங்கனிகள் சுவையுடன் இருப்பதாக
சிவாச்சாரியார்கள் பக்தர்கள்
மகிழ்ச்சி தெரிவித்தனர்.
3500 ஆண்டுகளுக்கு முன்,
கோயில் தல விருட்சத்தின் கீழ் அமர்ந்து
காமாட்சி அம்மன் சிவனை நோக்கி தவமிருந்து,
சிவனையே கணவனாக அடைந்ததாக
தல வரலாறு கூறுகிறது.
தல விருட்சத்தை பார்த்தாலே
சிவனை பார்த்த யோகம் கிடைக்கும்.
திருமணம், குழந்தை பாக்கியம் கிட்டும்
என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.#kanchipuram #templeTree.Dinamalar
Ещё видео!