1. வாஸ்து காயத்திரி மந்திரம்:
ஓம் அனுக்ரஹரூபாய வித்மஹே
பூமிபுத்ராய தீமஹி
தந்நோ வாஸ்துபுருஷ ப்ரசோதயாத்
Vastu Gayatri Mantra:
OM ANUGRAHAROOBAYA VIDHMAHE
BHOOMIPUTHRAYA DEEMAHI
TANNO VASTHUPURSHA: PRACHODAYATH
தினமும் 108 முறை வாஸ்து காயத்திரி மந்திரம் ஜெபித்தால் வீட்டில் உள்ள அனைத்து தோஷங்களும் விலகும்.
2. "ஓம்" ஒலி, மற்றும் கந்த சஷ்டி கவசம், லலிதா சஹஸ்ரநாமம், விஷ்ணு சஹஸ்ரநாமம், காயத்ரி ஜெபம் இவற்றை வீட்டில் தினமும் ஒலிக்க விடவும். இதனால் வீட்டில் உள்ள வாஸ்து பிரச்சனைகளும் மற்ற பிரச்சனைகளும் தீரும்.
3. வீட்டில் தினமும் இருவேளையும் விளக்கேற்றுவதால் நமது கண்ணனுக்கு தெரியாத இருளை வீட்டில் இருந்து விலக்கி வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தீமைகளில் இருந்து அரணாக காத்து நின்று நன்மைகளை பெருக்கும்.
4. வாரம் இருமுறையேனும் வீடு முழுக்க சாம்பிராணி/மூலிகை சாம்பிராணி தூபம் போட்டு வந்தால் வாஸ்து தோஷத்தால் ஏற்படும் தீயவை அகன்று நன்மை பெருகும்.
5. பசு வளர்ப்பதும், நாய்கள் வளர்ப்பதும், காக்கைகளுக்கு உணவளிப்பதும் மிகப் பெரிய வாஸ்து பரிகாரம் ஆகும். வாரம் ஒருமுறையேனும் பசுக்களுக்கு அகத்தி கீரை உண்ண கொடுப்பது பல்வேறு தோஷங்களை விலக்கி விடும்.
6. பெண் பெயரால் நிலத்தை வாங்குவதும், பெண் பெயருக்கு நிலத்தை கொடுப்பதும், பெண்ணை முன்னிறுத்தி வியாபாரம் செய்வதும் மிகச் சிறந்த வாஸ்து பரிகாரங்களாகும்.
7. தினமும் சூரிய பகவானை வணங்குதலும், சீரான குலதெய்வ வழிபாடும் மிகச் சிறந்த வாஸ்து பரிகாரங்களாகும்.
8. உண்மையான ஏழைகளுக்கு பசி ஆற்றுதுல், வஸ்த்திர தானம், கல்வி தானம், மற்றும் திருமண உதவி செய்தலும் சாலச்சிறந்தது.
9. தாய், தந்தையரை எல்லா காலத்திலும் நல்லபடியாக காப்பாற்றினால் எந்த தோஷமும் நம்மை அண்டாது.
10. எல்லாவற்றிற்கும் மேலாக நேர்மையான முறையில் பொருளீட்ட வேண்டும்.
#aalayamselveer #vasthupariharam
Ещё видео!