michaelsamraj@gmail.com
நண்பர்களே!
நாம் பாரம்பரியமாகப் பாடி வந்த பல கீர்த்தனைகள்
மறந்து போய் விட்டன. பல சபைகளில் கீர்த்தனைப் பாடல்கள் பாடுவது குறைந்துக் கொண்டே இருக்கிறது.
சிறந்த கருத்துக்கள் மற்றும் தூய தமிழ் வார்த்தைகள் நிறைந்த இந்தப் பாடல்களை நீண்ட காலம் வழக்கில் இருக்கும் ராகத்தோடு பாடி பதிவேற்றம் செய்யும் பணியை தொடர்ந்துக் கொண்டிருக்கிறேன்.
பாடல்களின் இராகங்கள் மட்டுமல்லாது அதற்கு Chordsம் இட்டிருக்கிறேன்.
கூடுமானவரை இதை அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
தங்கள் ஒத்துழைப்பை அளிக்குமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறேன்.
W.Michael Samraj
பல்லவி
கிருபை புரிந்தெனை ஆள்;-நீ பரனே!
கிருபை புரிந்தெனை ஆள்;-நிதம்
சரணங்கள்
1. திரு அருள் நீடுமெய்ஞ்ஞான திரித்து,
வரில்நரனாகிய மா துவின் வித்து! - கிருபை
2. பண்ணின பாவமெலாம் அகல்வித்து,
நிண்ணயமாய் மிகவுந் தயைவைத்து, - கிருபை
3. தந்திரவான் கடியின் சிறைமீட்டு,
எந்தை, மகிழ்ந்துன்றன் அன்புபாராட்டு. - கிருபை
4. தீமை உறும் பல ஆசையை நீக்கிச்
சாமி! என்னை உமக்காலயம் ஆக்கி. - கிருபை
5. தொல்வினையால் வரும் சாபம் ஒழித்து,
நல் வினையே செய் திராணி அளித்து. - கிருபை
6. அம்பரமீதுறை வானவர் போற்ற
கெம்பீரமாய் விசுவாசிகள் ஏத்த. - கிருபை
- மதுரநாயகம்
154 கீர்த்தனை | கிருபை புரிந்தெனை ஆள் | Kirubai Purindhenai | michael samraj | composer thought
Ещё видео!