சபரிமலை ஐயப்ப சுவாமி ஆலய வரலாறு பகுதி:1
[ Ссылка ]
ஐயப்ப சுவாமி வரலாறு பகுதி:2
[ Ссылка ]
பந்தளம் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டம், அடூர் வட்டத்தில் அமைந்திருக்கிறது.
பந்தளம் என்பது ஐயப்பன் வாழ்ந்த அரண்மனை இருக்கும் இடமாகும்.
இதனால் இந்நகரமானது புனிதம் வாய்ந்த இடமாக இந்துக்களால் கொண்டாடப்படுகிறது.
இங்கு பந்தள மன்னன் ராஜசேகரனால் கட்டப்பட்ட ஆலயம் இருக்கிறது. பந்தளத்தில் அமைந்துள்ள சன்னிதியில், ஐயப்பன் புலியுடன் நிற்பதுபோல் திரு காட்சி தருகிறார்
இந்தக் கோவில் அச்சன்கோவில் நதி கரையோரத்தில் அமைந்துள்ளது. சபரிமலை ஐயப்பனுக்கு மகரவிளக்கு பூஜையின் போது அணிவிக்கப்படும், திரு ஆபரணங்கள் அனைத்தும் இங்குதான் வைக்கப்பட்டிருக்கின்றன.
மணிகண்டன் பந்தள மகாராஜாவிடம் வளர்ந்தபோது, சுமார் 12 ஆண்டுகள் அவர் ஓடி ஆடி விளையாடி புனிதம் சேர்ந்த இடம் இது. மணிகண்டன் படித்த ஓலை சுவடிகள் இன்றும் கூட இங்குள்ளது இங்குள்ள குளமானது, ஐயப்பன் குளிப்பதற்காகவே ஏற்படுத்தப்பட்டதாகும். அந்தக் குளத்தின் நீர் எப்போதுமே வெதுவெதுப்பாக, இதமாக இருக்கும் என்பது தனிச்சிறப்பு.
மகர விளக்கு திருவிழாவின் மிக முக்கியமான நிகழ்ச்சியான திருஆபரண பெட்டி இங்கிருந்துதான் புறப்படுகிறது. மார்கழி 26ம் தேதி பந்தளத்திலிருந்து புறப்படும் திருவாபரணம் தை முதல் தேதி சபரிமலை வந்து சேருகிறது. மகர சங்கராந்தி தினத்தில் ஜோதியாய் ஐயன் தெரியும் போது மட்டுமே ஐயப்பனுக்கு இத்திருவாபரணங்கள் சாத்தப்பட்டிருக்கும்.
ஐயப்பன் திருவுருவில் அணிவிக்கும் ரத்ன மகுடம், நூபுரம், ஆரம், கடகம், அங்குலியங்கள், பதக்கம் போன்றவை ஒரு பெட்டியிலும், மாளிகைபுறத்தம்மனுக்கு அணிவிக்க வேண்டிய ஆபரணங்கள் மற்றொரு பெட்டியிலும் கொண்டு வருவர். தை முதல்நாள் பிற்பகலில் திருஆபரண பெட்டி சபரிபீடம் வந்தடையும்போது, வானத்தில் பருந்துகள் தோன்றி வட்டமிட்டு, திருஆபரண பெட்டியுடன் தொடர்ந்து வரும் காட்சி சிறப்புவாய்ந்த காட்சியாகும்.
கேரளத்தின் தலைநகரமான திருவனந்தபுரத்தில் இருந்து, வடக்கே 97 கிலோமீட்டர் தொலைவிலும், கோட்டயத்தில் இருந்து தெற்கே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவிலும் பந்தளம் அமைந்துள்ளது.
Pandalam is located in Adoor Circle, Pathanamthitta District, Kerala State. Pandalam is the place where the palace where Ayyappan lived. Thus the city is celebrated as a holy place by Hindus.
There is a temple here built by Pandala King Rajasekaran. In the shrine at Pandalam, Lord Ayyappan is shown standing with a tiger. This temple is situated on the bank of river Achankoil. This is where all the Thiru Aparanas, which are worn during Makarvilakku Pooja to Sabarimala Ayyappan, are kept.
When Manikandan grew up with Pandala Maharaja, this was the place where he ran and played for about 12 years. Manikandan's studied olaiccuvati are still here and the pool here was built for Ayyappan to take a bath. The special feature is that the water of the pond is always warm and pleasant.
Thiru Aparana Petti, the most important event of the Makara Lampu festival, departs from here. Thiruvaparanam leaves from Pandalam on 26th March and reaches Sabarimala on 1st day. On Makara Sankranti day, Ayyappan is blessed with these tiruvaparanas only when Jyotiai Aiyan is visible.
Pandalam is located about 97 kilometers north of Kerala's capital, Thiruvananthapuram, and about 50 kilometers south of Kottayam.
[ Ссылка ]
Abishek Indradevan
Bharatha Thamizhan
பாரத தமிழன்
அபிஷேக் இந்திரதேவன்
Ещё видео!