Arunagirinathar Movie Songs (Thirupugazh Songs) |
அருணகிரிநாதர் திரைப்படப் பாடல்கள் (திருப்புகழ்)
Song: Thandayani Vendayam
Movie: Arunagirinathar
Singer: T. M. Soundarrajan
Lyrics: Arunagirinathar (Thiruppugazh 62: Thiruchendur)
Composer: G. Ramanathan & T. R. Pappa
Director: T. R. Ramanna
பாடல்: தண்டையணி வெண்டையம்
படம்: அருணகிரிநாதர்
பாடியவர்: T. M. சௌந்தரராஜன்
பாடலாசிரியர்: அருணகிரிநாதர் (திருப்புகழ் 62: திருச்செந்தூர்)
இசையமைப்பாளர்: G. இராமநாதன் & T. R. பாப்பா
இயக்குனர்: T. R. ராமண்ணா
பாடல் வரிகள் (அருணகிரிநாதர் திருப்புகழ் (62 ) திருச்செந்தூர்):
தண்டையணி வெண்டையங் கிண்கிணிச தங்கையுந்
தண்கழல்சி லம்புடன் ...... கொஞ்சவேநின்
தந்தையினை முன்பரிந் தின்பவுரி கொண்டுநன்
சந்தொடம ணைந்துநின் ...... றன்புபோலக்
கண்டுறக டம்புடன் சந்தமகு டங்களுங்
கஞ்சமலர் செங்கையுஞ் ...... சிந்துவேலும்
கண்களுமு கங்களுஞ் சந்திரநி றங்களுங்
கண்குளிர என்றன்முன் ...... சந்தியாவோ
புண்டரிகர் அண்டமுங் கொண்டபகி ரண்டமும்
பொங்கியெழ வெங்களங் ...... கொண்டபோது
பொன்கிரியெ னஞ்சிறந் தெங்கினும்வ ளர்ந்துமுன்
புண்டரிகர் தந்தையுஞ் ...... சிந்தைகூரக்
கொண்டநட னம்பதஞ் செந்திலிலும் என்றன்முன்
கொஞ்சிநட னங்கொளுங் ...... கந்தவேளே
கொங்கைகுற மங்கையின் சந்தமணம் உண்டிடுங்
கும்பமுநி கும்பிடுந் ...... தம்பிரானே!!
(மேலும் அருணகிரிநாதர் திருப்புகழ்ப் பாடல் வரிகளுக்கு:
[ Ссылка ])
Lyrics (Arunagirinathar's Thiruppugazh (62) Thiruchendur):
thaNdaiaNi veNdaiyang kiNkiNisa dhangaiyun
thaNkazhalsi lambudan ...... konjavEnin
thandhaiyinai munparindhu inbavuri koNdunan
santhodama Naindhunin ...... RanbupOlak
kanduRaka dambudan sandhamaku dangaLum
kanjamalar sengaiyum ...... sindhuvElum
kaNgaLumu gangaLum chandhiRani RangaLum
kaNkuLira endranmun ...... sandhiyAvO
puNdarikar aNdamum koNdabagi raNdamum
pongiezha vengaLang ...... koNdapOdhu
pongiriye namchiRandhu enginumva Larndhumun
puNdarikar thandhaiyum ...... sindhaikUrak
koNdanada nampadham sendhililum endranmun
konjinada namkoLum ...... kandhavELE
kongaikuRa mangaiyin sandhamaNam uNdidum
kumbamuni kumbidun ...... thambirAnE!!
(For More Arunagirinathar Thiruppugazh Songs Lyrics:
[ Ссылка ])
Ещё видео!