#Partnership தாயை இழந்த குட்டியை
விரட்டி விட்ட யானைகள்!
கோவை மாவட்டம் தடாகம் மற்றும் வரப்பாளையம் பகுதியில், செவ்வாயன்று வனத்தை விட்டு வெளியேறிய 1 மாதமே ஆன யானைக்குட்டி தனியாக சுற்றிக்கொண்டு இருந்தது.
அதன் தாய் யானை, சற்று தொலைவில் உட்கார்ந்த நிலையில் இறந்து கிடந்தது.
யானையின் உள் உறுப்புகள் பாதிக்கப்பட்டு இறந்ததாக உடற்கூராய்வுக்கு பின் வனத்துறையினர் தெரிவித்தனர்.
தாயை இழந்த குட்டியை வேறு யானை கூட்டத்துடன் சேர்த்துவிடும் முயற்சியில் வனத்துறையினர் ஈடுபட்டுள்ளனர்.
குட்டிக்கு உணவு கொடுத்து பராமரித்த வனத்துறையினர், பொன்னூத்தம்மன் கோயில் அருகே சுற்றித்திரிந்த யானைக்கூட்டத்துடன் குட்டியை சேர்த்துவிட முயன்றனர்.#Coimbatore #BabyElephant
Ещё видео!