Gudiyatham Gangai Amman Thiruvizha | குடியாத்தம் கங்கை அம்மன் சிரசு ஊர்வலம் 2019
வேலூரிலிருந்து 32 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது குடியாத்தம். இங்குள்ள கங்கையம்மன் ஆலயத்தில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாளன்று அம்மனின் சிரசு உற்சவம் மிகவும் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது.
ஒரு காலகட்டத்தில் சோழ மன்னனான குலோத்துங்கச் சோழன், காடாக இருந்த இப்பகுதியை திருத்தி நாடாக்கி ஏராளமான மக்களை இங்கு குடியேறச் செய்ததாகவும், அதனால் இந்த ஊர் குடியேற்றம் என்றும் குடியேற்ற நல்லூர் என்றும் அழைக்கப்பட்டு மருவி தற்போது குடியாத்தம் என்று வழங்கப்படுவதாகவும் கூறுகின்றனர்.
இத்தலத்தில் கங்கையம்மன் திருவிழா, கெங்கையம்மன் சிரசுத் திருவிழா என்ற பெயரில் ஒவ்வோர் ஆண்டும் வைகாசி மாதம் முதல் நாள் (பெரும்பாலும் மே மாதம் - 14 அல்லது 15ம் தேதி) மிகக் கோலாகலமாகக் கொண்டாடப்படுகிறது.
இத்திருவிழாவில் வேலூர் மாவட்டம் மட்டுமின்றி, அண்டை மாநிலங்களான ஆந்திரா, கர்நா டகா மாநிலங்களிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து கலந்து கொள்கின்றனர். இந்த சிரசுத் திருவிழாவின் போது கங்கையம்மனின் பிர மாண்டமான சிரசு ஒரு குறிப்பிட்ட இனத்தவரால் காலங்காலமாக உருவாக்கப்படுகிறது. திருவிழா நாளன்று இந்த சிரசு மேளதாளங்களோடு, லட்சக்கணக்கான பக்தர்கள் புடைசூழ 3 கி.மீ. தொலைவிலுள்ள ஆலயத்திற்கு ஊர்வலமாக எடுத்து வரப்படுகிறது.
ஆலயத்தில் ஏற்கனவே உருவாக்கப்பட்டுள்ள தேவியின் உடலோடு இந்தச் சிரசு பொருத்தப்படுகிறது. இதன்மூலம் தேவி உயிர் பெற்று எழுந்து பக்தர்களுக்கு அருள் பாலிப்பதாக ஐதீகம். இந்தத் திருவிழாவின் மிக முக்கியமான அம்சமாக இந்நிகழ்ச்சி கருதப்படுகிறது. நன்கு அலங்கரிக்கப்பட்ட திருத்தேரில் தேவியின் சிரசு பவனி வரும் ஊர்வலத்தில் புலி வேஷம், கரகம் போன்ற கிராமிய நடனங்களும் மேளதாளங்களும் முக்கிய இடம் பெறுகின்றன. இவற்றால் தேவி மகிழ்ச்சி அடைவதாக பக்தர்கள் நம்புகின்றனர்.
Gudiyatham is a municipal town situated in Vellore District (North Arcot Dt), 32 km from Vellore. One has to take the Bangalore Highway from Vellore and turn right at Pallikonda and go about 12 km to reach Gudiyatham. Gudiyatham has about 500 villages surrounding it.
The name of the town Gudiyatham has arrived from the word ‘Kudiyetram’ (குடியேற்றம்) which in Thamizh means ‘surging population’. It is said that Kulothunga Chozha cleared some forest, made people settle here and named the place as ‘Kudiyetra Nallur’ (குடியேற்ற நல்லூர்), which is believed to be the ancient name of this town. This place also was called as ‘Jayamkonda Chathurvedi Mangalam, as the king Kulothunga Chozhan donated this place after his victory over parts of Thondai Mandalam regions. Even today, the majority population of this town belongs to a community called ‘Sengunthar’ who was an integral part of the Chola army.
Gudiyatham is very popular for the temple it has for Sri Gangai Amman. Sri Gangai Amman temple is located at the heart of this town on the northern bank of the holy river Koundinya Mahanadhi. This river is believed to be the Ganges itself which came down to earth with the prayers of a Saint by name Koundinya Maharishi, who was a disciple of Sage Vasishtar. The legend has it that the Koundinya Rishi, to free himself from his sins came to this place, prayed Lord and brought the Ganges to flow through this place and worshipped Lord Shiva in this village (called Karuppuleeswarar).
A major festival called ‘Gangai Amman Thiruvizha’ is celebrated in this town on a grand scale every year on the first day of the Thamizh month Vaikasi, which usually falls on May 14th or 15th. Sri Renukadevi is celebrated here as Sri Gangai Amman.
A beautiful temple Chariot is made to float around the city on the previous day to the festival.
This event is popularly called as Sirasu (சிரசு, means head) festival. About a million people throng the town from various parts of the country to visit this event. Amman will be a feast to watch to see her being carried on the head, which will look like as if she is floating on the huge crowd of people. Various artists from many villages will be performing throughout her way to the temple. One can see many village art forms like Karagam (கரகம்), Silambu (சிலம்பு), Puli Vesham (புலி வேஷம்) and many other martial arts being performed all her way to the temple. This is to symbolize that the Amman is so happy that she is going to get alive with the head which is going to be fixed on her body.
Sri Gudiyattam Gangai Amman Tiruvizha Video | Gudiyattam Gangaiamman | Gudiyatham Gangaiamman | Gudiyatham Gangai amman thiruvizha | Gudiyatham Gangaiamman festival | Gudiyatham Gangai amman festival | Gudiyatham gengaiamman festival | Gudiyattam Gengai amman festival | GangaiAmman | கெங்கையம்மன் திருவிழா | குடியாத்தம் கங்கை அம்மன் கோவில் திருவிழா 2019 | கங்கை அம்மன் திருவிழா | GANGAI AMMAN FESTIVAL | GENGAI AMMAN | கெங்கையம்மன் திருவிழா குடியாத்தம்
Jay TV promotes Indian culture and language to the mass viewers via talk shows, movies, and also programs on health and lifestyle.
Follow us on:
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Twitter: [ Ссылка ]
Website: [ Ссылка ]
#கெங்கையம்மன்சிரசுஊர்வலம் #குடியாத்தம் #Vellore
Ещё видео!