திருமண வாழ்த்துப் பாடல்
Hakeemiyya Media Unit Admin’s Wedding Song
#Hakeemiyya_Media_Unit
#Wedding_Song
#Hakeemiyya_Song
#Sri_Lanka_Song
#Sri_Lanka_Madrasa_Song
#Hamidh_Zarook
#Imam_Ashraf
#Islamic_Song
Vocal :- Hamidh Zarook
Lyrics :- Imam Ashraf
இருமை மணம் ஒன்றாகும்
திருமணமாலே
புதுமை உறவென்றாகும்
புதுமண நாளே
அழகின் மகளே நீயும்
மலரைப் போலே
பட்டாம் பூச்சாய் மகனும்
உந்தன் மேலே
வான் எங்கிலும் சிறகாடிடும்
பூங்குயிலின் ஓசையில்
மணநாளிகை இனிதாகிடும்
சுக கானம் கேட்டிடும்
بارك الله لكما
وبارك عليكما
இருமை மணம் ஒன்றாகும்
திருமணமாலே
புதுமை உறவென்றாகும்
புதுமண நாளே
தூயவனே உன் அருளை
பொழிந்திடுவாயோ மணவாழ்வில்
நபிவழியில் வாழ்ந்திடவே
அருளிடுவாயோ ஈருலகில்
சஜ்லான் ஷஹீத் இன் வாழ்வினிலே
இணைவாகும் அழகிய திருமகளே
ருமானா அரூஸ் வெண்மதியே
உன்னைக்காண நிலவும் மயங்கியதே
பண்பாலே ஒன்றிட
அன்பை மென்றிட
இனிமையாகும் உறவே
இணைவோரின் உள்ளங்கள்
இன்பமாகிட
பாடும் கவிதை
வான் எங்கிலும் சிறகாடிடும்
பூங்குயிலின் ஓசையில்
மணநாளிகை இனிதாகிடும்
சுக கானம் கேட்டிடும்
بارك الله لكما
وبارك عليكما
இருமை மணம் ஒன்றாகும்
திருமணமாலே
புதுமை உறவென்றாகும்
புதுமண நாளே
உம் வாழ்வில் குறைவேதும்
நிலவாது நாம் வேண்டிடுவோம்
மறைவழியில் வாழ்ந்திட நீர்
அழகிய சுவனம் சேர்ந்திடுவீர்
பூவனங்கள் எங்கும் சென்றாலும்
உமக்காக வாழும் துணையுள்ளம்
அன்பென்னும் உறவில் உருவாகும்
கணவன் மனைவி ஒன்றாகும்
பண்பாலே ஒன்றிட
அன்பை மென்றிட
இனிமையாகும் உறவே
இணைவோரின் உள்ளங்கள்
இன்பமாகிட
பாடும் கவிதை
வான் எங்கிலும் சிறகாடிடும்
பூங்குயிலின் ஓசையில்
மணநாளிகை இனிதாகிடும்
சுக கானம் கேட்டிடும்
بارك الله لكما
وبارك عليكما
இருமை மணம் ஒன்றாகும்
திருமணமாலே
புதுமை உறவென்றாகும்
புதுமண நாளே
Ещё видео!