சிந்தூர வடிவழகை...ஸ்ரீ ஹரிஹரபுத்ர த்யானம் - மஞ்சப்ரா ஸ்ரீ மோகன் - ஆலங்குடி ராதாகல்யாணம்
விருத்தம்:
அகங்காரம் எனும் ஆணவத்தை பலிகொடுத்து
புத்தி எனும் புஷ்பத்தால் மாலை சூட்டி
மனதீபத்தை ஞான ஒளியினால் ஏற்றி
சரணகோஷம் முழக்கி சபரிமலை தனவருடன்
சேரவருவீரே ஜகவீரே ஐயனே ஐயனே ஐயனே
நீ அச்சன் கோவில் அரசனாய் ஆரியங்காவில் அய்யனாய் குளத்தூரில் குழந்தையாய் எரிமேலியில் தர்மசாஸ்தாவாய்
சபரிமலையில் தபஸ்வரூபனாய்
அவதாரம் கொண்ட ஐயனே ஐயனே ஐயனே...
அச்சன் கோவில் அரசனைக் கண்டால் ஆஸ்தீகம் வளரும் என்பர்
ஆரியங்காவில் ஐயனை கண்டால் ஆணவம் அழியும் என்பர்
அழுதா நதியில் நீராடினால் அமைதி கிடைக்கும் என்பர்
உறுதி பூண்ட கால்களுக்கு உன் பூங்காவனம் மெத்தை என்பர்
கரிமலையில் ஏறிவிட்டால் கணபதியின் அருளென்பர்
கழுமலை இறங்கிவிட்டால் கால்கள் செய்த புண்யம் என்பர்
பம்பா நதியை அடைந்து விட்டால் பரம ஸத்யம் நன்மை என்பர்
சபரிமலையில் தபஸ்வரூபனாய் இருக்கின்ற உனை கண்டுவிட்டால்
ஸகல பாபங்களும் தொலையும் என்பர் ஐயனே ஐயனே ஐயனே...
சேவித்தெழுந்திருந்த ஐயப்ப வடிவம் கண்டேன்
பத்ம கிரீடம் கண்டேன் வைடூர்ய மேனி கண்டேன்
மார்பில் பதக்கம் மாலை அசைய கண்டேன்
கைவளைகள் கலகல என மின்னக் கண்டேன்
உனது தங்க ஒட்டியாணம் தகதகவென ஜொலிக்க கண்டேன்
காலில் சிலம்பு கண்டேன் மங்கள நாயகனை மனங்குளிர
கண்டு மகிழ்ந்தேன்.. மகிழ்ந்தேன்.. மகிழ்ந்தேன்..
ஐயப்பா என் ஐயப்பா என் ஐயப்பா..
பாடல்:
சிந்தூர வடிவழகை செந்தமிழில் பாட வந்தோம்
உந்தன் முகம் காண வந்தோம் காந்தமலை நாடி வந்தோம்
பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பா
சிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பா
இருமுடி தலை தாங்கி சுமந்து வந்தோம் அப்பா
திருவடி சரணம் என்று நாடி வந்தோம் அப்பா
மகர மாதத்தில் மாமலை அடைந்தோமே
மங்கள ஜோதியில் எங்களை மறந்தோமே
பந்தளத்து பரம்பரையில் வந்துதித்த ஐயப்பா
சிந்தையிலே குடி கொள்ளும் சிங்கார ஐயப்பா
ஹரிஹரசுதனே சரணம் சரணம் ஐயப்பா.. ஐயப்பா
அநாதி மூல பொருளே சரணம் ஐயப்பா.. ஐயப்பா
பந்தள சுந்தர சுந்தர சந்தா ஐயப்பா
பாண்டிய ராஜ குமாரா சரணம் ஐயப்பா..ஐயப்பா
அன்னதானத்தின் பிரபுவும் நீயே ஐயப்பா
அகில லோக சரணாகத ரக்ஷக ஐயப்பா
நாமாவளி:
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
ஸ்வாமியே சரணம் ஐயப்பா
சரணம் சரணம் ஐயப்பா
Alangudi Namasankeerthana Trust
9444922848 - rkraman
Radhe Krishna ! Alangudi Radhakalyanam 2020 by Alangudi Namasankeerthana Trust, Alangudi (Gurusthalam), Thiruvarur District. 73rd year celebration of Radhakalyana Mahotsavam was from 07/02/2020 to 09/02/2020.
Sindhoora Vadivazhagai - Sri Ayyapa Dhyanam - Namasankeerthanam by Manjapra Mohan Bhagavathar
Website - http:www.sriradhakalyanam.org
Mail Us at alangudi@sriradhakalyanam.org
Facebook - [ Ссылка ]
Youtube Channel - [ Ссылка ]
Mobile/Whatsapp : +91 - 9444922848
You may provide us your feedback through whatsapp/phone call (+91 - 9444922848).
#alangudi #radhakalyanam #alangudiNamasankeerthanaTrust #radheKrishna #radhaKrishna #bhajan #gurusthalam #namasankeerthanam #ManjapraMohan #Bhagavathar
Ещё видео!