1964ஆம் ஆண்டு T. R. ராமண்ணா இயக்கத்தில் T. M. சௌந்தரராஜன் நடித்து வெளிவந்த 'அருணகிரிநாதர்'
திரைப்படத்தில் இடம்பெற்ற பாடல் 'செங்கேழ் அடுத்த சினவடிவேலும்'. அருணாகிரியாரின் கந்தர் அலங்காரம்,வேல் விருத்தம்,மயில் விருத்தம் ஆகியவற்றிலிருந்து தொகுத்த பாடல் காட்சி. பாடியவர்T.M.சௌந்தரராஜன் . அருணகிரியாரின் அழைப்புக்கு இரங்கி தூணில் முருகன் தோன்றிய மண்டபம் திருவண்ணாமலைக் கோவிலின்
நுழைவில் 'கம்பத்து இளையனார் சந்நிதி என்ற பெயரில் இருக்கிறது. அதன் எதிரிலேயே ரமண மகரிஷி இளம் வயதில் தியானம் செய்த பாதாள லிங்கமும் அமைந்திருக்கிறது.
படத்தின் இசையை G.ராமநாதனும் அவரைத் தொடர்ந்து T.R.பாப்பாவும் அமைத்தனர். .
செங்கே ழடுத்த சினவடி வேலுந் திருமுகமும்
பங்கே நிரைத்தநற் பன்னிரு தோளும் பதுமமலர்க்
கொங்கே தரளஞ் சொரியுஞ்செங் கோடைக் குமரனென
எங்கே நினைப்பினும் அங்கேயென் முன்வந் தெதிர்நிற்பனே.
(கந்தர் அலங்காரம்)
வெங்காள கண்டர்கைச் சூலமுந் திருமாயன்
வெற்றிபெறு சுடர் ஆழியும்
விபுதர்பதி குலிசமுஞ் சூரன் குலங் கல்லி
வெல்லா எனக்கருதியே
சங்க்ராம நீசயித் தருளெனத் தேவருஞ்
சதுர்முகனும் நின்றிரப்பச்
சயிலமொடு சூரனுடல் ஒருநொடியில் உருவியே
தனிஆண்மை கொண்ட நெடுவேல்
கங்காளி சாமுண்டி வாராகி இந்த்ராணி
கெளமாரி கமலாசனக்
கன்னிநா ரணிகுமரி த்ரிபுரைபயி ரவிஅமலை
கெளரிகா மாஷிசைவ
சிங்காரி யாமளை பவாநிகார்த் திகைகொற்றி
த்ரியம்பகி அளித்த செல்வச்
சிறுவன்அறு முகன்முருகன் நிருதர்கள் குலாந்தகன்
செம்பொற் றிருக்கை வேலே. (வேல்விருத்தம்)
சந்தான புஷ்பபரி மளகிண் கிணீ முகச்
சரணயுக ளமிர்தப்ரபா
சந்த்ரசே கரமூஷி காரூட வெகுமோக
சத்யப்ரி யாலிங்கனச்
சிந்தா மணிக்கலச கரகட கபோலத்ரி
யம்பக விநாயகன்முதற்
சிவனைவலம் வருமளவில் உலகடைய நொடியில்வரு
சித்ரக் கலாபமயிலாம்
மந்தா கிநிப்பிரப வதரங்க விதரங்க
வனசரோ தயகிர்த்திகா
வரபுத்ர ராஜீவ பரியங்க தந்திய
வராசலன் குலிசாயுதத்
திந்த்ராணி மங்கில்ய தந்து ரட்ஷாபரண
இகல்வேல் விநோதன் அருள்கூர்
இமையகிரி குமரிமகன் ஏறுநீ லக்ரீவ
ரத்னக் கலாப மயிலே.
(மயில் விருத்தம்)
Ещё видео!