Kadan Vanga Kudatha Natchathiram - Kadan Vanga Kudatha Natkal - Kadan Kodukkum Nalla Neram
கடன்கொடுக்க வாங்கிடவா காதநாளைக்
கருத்துடனே சொல்லுகிறேன் நன்றாய்க்கேளு
திடமுடைய வெள்ளிசெவ்வாய் தன்னிலாகா
சிறந்தவமா வாசையுமட் டமியுமாகா
அடமுடைய கார்த்திகையு மகமுப்பூரம்
ஆயிலியஞ் சித்திரைவி சாகமூலம்
தொடவேண்டா மிந்நாளைத் தள்ளிநீயுஞ்
சுகமுள்ள நாட்பார்த்துச் செய்துகொள்ளே
எந்த நாட்களில் நாம் கடன் கொடுக்க/வாங்க கூடாது என்பதை பற்றி உள்ள ஜோதிட பாடல் ஒன்றை தான் இப்போ நீங்க பார்க்கின்றீர்கள், இந்த பாடலின் பொருள், கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத நாட்கள் செவ்வாய்க்கிழமை மற்றும் வெள்ளிக்கிழமை ஆகும், அதே போல அமாவாசை மற்றும் அஷ்டமி திதிகள் அன்றும் கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத திதிகள் ஆகும். கார்த்திகை, ஆயில்யம், மகம், பூரம், சித்திரை, விசாகம், மூலம் இந்த ஏழு நட்சத்திரங்கள் வரும் நாட்களில் கடன் கொடுக்க மற்றும் கடன் வாங்க ஆகாத நாட்கள் ஆகும். எனவே இந்த நாட்களை தவிர்த்து கவனமுடன் நாள், நட்சதிரம் பார்த்து கடன் வங்கவோ, கொடுக்க வேண்டும் என்கிறது இந்த பாடல்.
#aalayamselveer #kadan #shorts
Ещё видео!