Astro Answers: ஆயில்யம் நட்சத்திரம் நீங்கள் அறிந்ததும் அறியாததும் | Ayilyam natchathiram secret | Astro Mani
ஆயில்ய நட்சத்திரம். நட்சத்திர வரிசையில் இது ஒன்பதாவது நட்சத்திரம். இந்த நட்சத்திரத்தின் அதிபதி புதன் பகவான்.
சகோதர பாசம், அன்புக்கு கட்டுப்படுதல், காரியத்தில் குறியாக இருப்பது, முன்கோபம், வைராக்கியம், தியாகம், எதையும் இழக்கத் தயாராக இருப்பது, எது கிடைத்தாலும் அப்படியே ஏற்றுக்கொள்வது, அவசர செயல்கள், காத்திருந்து பழிதீர்த்தல், எதிர்பார்ப்பில்லாமல் உதவிகள் செய்தல், சுயமாக கற்றுக்கொள்ளுதல், இலக்கு வைத்து செயல்படுதல் இவை எல்லாம் ஆயில்யத்தின் குணங்கள்.
வெளியாட்களிடம் பழகும்போது நல்லவராக இருக்கும் இவர்கள், தன் குடும்பத்தாரிடம் சிடுசிடுவென இருப்பார்கள். ஊருக்கே உபதேசம் செய்வார்கள். ஆனால் தான் அதை பின்பற்ற மாட்டார்கள். அதீதமாக முன்கோபம் கொண்டவர்கள். இந்த கோபத்தாலேயே பலரையும் பகைத்துக்கொள்வார்கள். மற்றவர்களுக்கு அறிவுரை வழங்கும் இவர்கள், தனக்கு யாரும் அறிவுரை கூறினால் அவற்றைக் காது கொடுத்து கூட கேட்கமாட்டார்கள்.
அன்பாகவும், ஆதரவாகவும் பேசும் இவர்கள், கோபம் வந்தால் விஷத்தைக் கக்குவது போல் வார்த்தைகளாலேயே கொல்வார்கள். தந்தையுடன் இணக்கமாக இருக்க மாட்டார்கள். இன்னும் சொல்லப்போனால் தந்தைக்கு எதிராகவே நடந்து கொள்வார்கள்.
இவர்கள் போகும் பாதையில் அப்படியே போகாவிட்டால் ஒரு பிரச்சினையும் இருக்காது. மாறாக இது சரி தவறு என ஏதாவது நாம் கூறினால், நம்மை எதிரியாக பாவிப்பார்கள்.
தன் சுய முயற்சியாலேயே முன்னேறுவார்கள். யாருடைய உதவியையும் எதிர்பார்க்க மாட்டார்கள். மறைமுக சேமிப்பு வைத்திருப்பார்கள். அந்த சேமிப்பையும் பலமடங்காக பெருக்குவது எப்படி? என்ற வித்தை கற்றவர்களாக இருப்பார்கள்.
கேள்வி கேட்கும் இடத்தில் இருப்பார்களே தவிர... மாறாக பதில் சொல்லும் இடத்தில் இருக்க விரும்பமாட்டார்கள்.
அந்த வேலையில் நிரந்தரமாக இருக்க மாட்டார்கள். தன்மானத்திற்கு பங்கமேதும் வந்தால் யோசிக்காமல் அந்தவேலையை உதறிவிடுவார்கள்.
இவர்களுக்கு கல்வியால் பெறும் அறிவை விட, அனுபவத்தால் கிடைக்கும் அறிவே அதிகம்.
ஆக்கிரமிப்பு செய்வதில் ஆயில்யம் ஆகச்சிறந்த நட்சத்திரம். எதையும் அப்படியே தன்னுள் ஈர்த்துக்கொள்ளும் குணம் இந்த நட்சத்திரக்காரர்களுக்கு உண்டு.
Here is list of the most interesting videos of Astro Answers :
---------------------------------------------------------------------
ராகு நின்ற இடம் யாருக்கு யோகம் [ Ссылка ]
நவாம்சம் கட்டம் எதற்கு ராசி கட்டம் எதற்கு? [ Ссылка ]
கேது நின்ற இடம் யாருக்கு பலம்? [ Ссылка ]
எது வலிமையான நட்சத்திரம்? [ Ссылка ]
உங்கள் ஜாதகம் சரியா ? தவறா ? [ Ссылка ]
லக்னம் கண்டுபிடிக்கலாம் வாருங்கள் [ Ссылка ]
லக்னாதிபதி பலம் [ Ссылка ]
இரண்டு கல்யாணம் யாருக்கு [ Ссылка ]
கேது திசை முன் எச்சரிக்கை [ Ссылка ]
குலதெய்வத்தை கண்டறியும் வழிமுறை [ Ссылка ]
ஜாதகம் திருமணத்திற்கு முன்பு மற்றும் பின்பு [ Ссылка ]
திடீர் அதிர்ஷ்டம் யாருக்கு எப்போது ? [ Ссылка ]
நவாம்சம் எப்படி பார்க்கவேண்டும் ? [ Ссылка ]
------------------------------------------------- -----------------------------------------------------
Follow Us On Social Medias :
---------------------------------------------------
Facebook: [ Ссылка ]
Instagram: [ Ссылка ]
Twitter: [ Ссылка ]
#astroanswers #astromanikandan #astromani
Ещё видео!