குறிப்பு: உங்கள் ஆதரவு எங்கள் தேவை மறக்காமல்
(SUBSCRIBE) செய்யவும் நன்றி.
................................................................................
Note: Need for your support please don't forget to
SUBSCRIBE for ALL IS WELL thank you.
................................................................................
Join to ALL IS WELL support with us :
Blogger : [ Ссылка ]
Facebook : [ Ссылка ]
Twitter : [ Ссылка ]
Google+ : [ Ссылка ]...
Youtube : [ Ссылка ]...
Instagram : [ Ссылка ]
................................................................................
#திருக்குறள் #திருவள்ளுவர் #தமிழ் #தினம்_ஒரு_திருக்குறள் #Thirukural #Thiruvalluvar #Dhinam_Oru_Thirukural #Daily_One_Thirukural, தினம் ஒரு திருக்குறள், Daily One Thirukural, #ALLISWELL #ALLISWELL2004 @ALLISWELL2004
................................................................................
உலகமே வியக்கும் அதிசய நூல் திருக்குறள்.
இயற்றியவர் திருவள்ளுவர் என்ற உலகமே போற்றும் ஒரு தமிழர்.
மீண்டும் யாராலும் படைக்க முடியாத உலக பொதுமறை நூல் திருக்குறள்.
தமிழன் என்பதில் பெறுமிதம் கொள்வோம்.!
பலருக்கும் தெளிவுறாத திருக்குறளுக்கு தெளிவுரை வழங்கியவர்களின் சிலர் உரை கீழே உங்களுக்காக.
உங்களுடைய நண்பர்களுக்கு பகிரவும் நன்றி...
................................................................................
*#தினம்_ஒரு_திருக்குறள்.*
#குறள் 401:
அரங்கின்றி வட்டாடி யற்றே நிரம்பிய
நூலின்றிக் கோட்டி கொளல்.
Kural 401 :
Remake of English by S.V.Shankar - ALL IS WELL
AranghGhindri Vattaadi Yatrey Nirambhiya
Noolindrikh Koatti Kolal.
கலைஞர் மு.கருணாநிதி உரை:
நிறைந்த அறிவாற்றல் இல்லாமல் அவையில் பேசுவது ஆடுவதற்கான கட்டம் போட்டுக் கொள்ளாமலே சொக்கட்டான் விளையாடுவதைப் போன்றதாகும்.
மு.வரதராசனார் உரை:
அறிவு நிரம்புவதற்குக் காரணமானக் நூல்களைக் கற்காமல் கற்றவரிடம் சென்று பேசதல், சூதாடும் அரங்கு இழைக்காமல் வட்டுக்காயை உருட்டிஆடினார் போன்றது.
சாலமன் பாப்பையா உரை:
அறிவு வளர்ச்சிக்கு ஏற்ற நூல்களைக் கல்லாதவர், கற்றவர் அவையில் பேசுவது, கட்டம் போடாமல் தாயம் உருட்டுவது போலாம்.
பரிமேலழகர் உரை:
அரங்கு இன்றி வட்டு ஆடியற்று - அரங்கினை இழையாது வட்டாடினாற்போலும், நிரம்பிய நூல்இன்றிக் கோட்டி கோளல் - தான் நிரம்புதற்கு ஏதுவாகிய நூல்களைக் கல்லாது ஒருவன் அவையின்கண் ஒன்றனைச் சொல்லுதல்.
(அரங்கு - வகுத்ததானம். வட்டாடல்: உண்டை உருட்டல். இவை 'கட்டளையன்ன வட்டரங்கு இழைத்துக் கல்லாச் சிறாஅர் நெல்லிவட்டாடும்' (நற்.3) என்பதனான் அறிக. நிரம்புதல்: அறிய வேண்டுவன எல்லாம் அறிதல். 'கோட்டி' என்பது ஈண்டு ஆகுபெயர். 'புல்லா எழுத்தின் பொருளில் வறுங்கோட்டி' (நாலடி.155) என்புழிப்போல. சொல்லும் பொருளும் நெறிப்படா என்பதாம்.).
மணக்குடவர் உரை:
கொம்மையின்றி வட்டாடினாற் போலும்; நிரம்பிய நூல்களைக் கற்றலின்றி வார்த்தை சொல்லுதல். அரங்கு- சூது: வட்டாடுதல்- உருண்டை யுருட்டல்: கோட்டி கொளல்- 'புல்லா வெழுத்திற் பொருளில் வறுங்கோட்டி' என்றாற்போல. இது கல்லாதார் வார்த்தை சொல்லின் அது தப்புமென்றது.
திருக்குறளார் வீ. முனிசாமி உரை:
தனக்கு அறிவு நிரம்புதற்குக் காரணமான நூல்களைக் கல்லாத ஒருவன், அவையில் ஒன்றனைச் சொல்லுதல், ஆடுகின்ற அரங்கினை அமைக்காமல் உண்டை (பகடைக்காய்) உருட்டியது போன்றதாகும்.
Translation:
Like those at draughts would play without the chequered square,
Men void of ample lore would counsels of the learned share.
Explanation:
To speak in an assembly (of the learned) without fullness of knowledge, is like playing at chess (on a board) without squares.
Ещё видео!