whats app: 9894952438
ஜோதிடம் என்பது கிரகங்களின் தாக்கத்தைப் பற்றிய அறிவியல் பூர்வமான படிப்பாகும். இந்த கிரகங்கள் வானவியல் மற்றும் கணிதவியல் அடிப்படையில் கணிக்கப்பட்டு ஒருவரின் ஜாதக கட்டத்தில் குறிக்கப்படுகிறது. இந்த கட்டம் நிமிடத்திற்கு நிமிடம், மணிக்கு மணி , நாளுக்கு நாள் மாறுபடும். எனவே ஒருவரின் ஜாதகம் போல் மற்றவருடையது இருப்பதில்லை. ஜோதிடத்தை வெறும் ஏட்டுகல்வி மூலம் மட்டும் கற்க இயலாது. கடவுள் நம்பிக்கை, அனுபவம், தூய வாழ்க்கை, எளிமை போன்ற பண்புகள் ஜோதிட நிபுணத்துவம் பெற அவசியம்.
ஜோதிடம் என்பது, ஆயிரக்கணக்கான ஆண்டுகளாக, நம்முடைய ரிஷி முனிகள் தொகுத்து வைத்த புள்ளி விவரங்களாகும் ( Statistics). ஜோதிட வல்லுனர்கள், பல்லாயிரக் கணக்கான மனிதர்களை, உற்று நோக்கி, அவர்களுடைய வாழ்க்கையில் நடந்த நிகழ்வுகளை பதிவு செய்து, ஆராய்ந்து அதனை முறைப்படி குரு சிஷ்யப் பரம்பரையாக மக்களுக்கு கணிதம்
செய்து பலன்களை கூறி இருக்கின்றனர். இந்த நேரத்தில், இந்த கிரக அமைப்பில் பிறந்தவர்கள் இப்படி இருப்பார்கள் என்ற புள்ளி விவரங்களை வைத்தே பலன் கூறப்படுவதால், ஜோதிட சாஸ்திரம் பொய் இல்லை, அது ஒரு கணிதமே என்று நடைமுறையில் நிரூபிக்கபட்டு வருகிறது. உயர்நிலை கணக்கு பாடங்களில் ஒன்றே Numerical Analysis என்ற ஒரு வகை கணக்குப் பாடமாகும். இந்த பாடத்தில் Forward & Backward Interpolations, Newton-Raphson Fomula போன்ற சூத்திரங்களை பயன்படுத்தி, கடந்த 1970, 1980, 1990, 2000, 2010 ஆம் ஆண்டுகளில் சென்னையின் மக்கள் தொகை (புள்ளி விவரங்கள்) தெரிந்து இருந்தால், 2020 ஆண்டில் சென்னையின் மக்கள் தொகை என்னவாக இருக்கும் என்று சொல்லி விடலாம். இதேபோல் கணக்கில் மற்றொரு பிரிவு, Permutation and Combination என்ற வகையாகும். இதன் பயன்பாடு ஜோதிடத்தில் கூடுதலாக இருக்கிறது. ஆயிரக் கணக்கான யோகங்கள் இம்முறையிலேயே வகைப் படுத்தப் படுகிறது. உலக நன்மை கருதி நம் முன்னோர்கள் நம்மிடம் கொடுத்துச் சென்ற, ஆயிரக்கணக்கான வருடங்களாக, லட்சக்கணக்கான மக்களிடம் எடுக்கப்பட்ட, தொகுக்கப்பட்ட புள்ளி விவரங்களின் அடிப்படையில், அவர்கள் காட்டிய வழியில், சூத்திரங்களை வைத்து கணக்கீடு செய்து, பலன் கூறுவதால், ஜோதிடம் எப்போதும் பொய்யாகாது. அதனால் ஜோதிடமும் ஒரு அறிவியலேயாகும்.
buthan medu (புதன் மேடு)
Теги
tamilastrologytamil astrologylifestylelifehacksrisabammithunamkannithulamthanusurudraharaviruchagamkumbammeenamkairegairasipalanTaurusGeminiCancerVirgoLibraScorpiotoday rasipalanthirumana poruthamkai regai jothidamkai regaisri la sri ammaகுரு மேடுகைரேகை சாஸ்திரம்kairegai josiyam in tamilkairegai josiyam in tamil for marriagekairegai josiyam in tamil for lovekairegai josiyam in tamil apppalm readingகைரேகை