music - Mano
Lyrics - K.R.Dharan
Singer - Reema
lyrics video -Kathiravan
produced by South shrdi SaiBaba temple - Akkarapatti
சாயி ராம் சாயி ராம் சாயி ராம் சாயி ராம்
குருவே உம்மை ஒருமுறை கண்டு
கோடி புண்ணியம் அடைந்தோமே
குறைகளெல்லாம் உன் பாதம் சேர்த்து
பிறவிப் பயனை உணர்ந்தோமே
தெரியாத உலகம் எல்லாம் தெரிந்தது
புரியாத உறவும் இன்று புரிந்தது
எது நிலைக்குமோ எது பிழைக்குமோ
காண தேர்ந்த காட்சி தெரிந்தது என் சாயி
உயிரும் சில காலம் இந்த உடலும் சில காலம்
உறவும் சில காலம் நம் பொருளும் சில காலம்
பொன்னும் புகழும் சில காலம்
இந்த போட்டி பொறாமைகள் சில காலம்
நினைத்து நினைத்து பார்த்தாலே
இந்த மலரும் மணமும் சில காலம்
கூட்டி கழித்து பார்த்தாலே
நம் வாழ்க்கைக் கூட சில காலம்
எல்லாம் சில காலம் எதுவும் சில காலம்
சாயின் அன்பே சாயின் அருளே
நிலைத்து நிற்கும் பல காலம்
அதுவே எங்கள் பொற்காலம்
அற்புதம் செய்வதில் பெரும் வள்ளல் சாயி ராம்
அற்பம் தான் இம்மை ஒரு சிற்பம் ஆக்கினார்
உள்ளும் புறமாய் நின்றாரே
இந்த உலகின் உள்ளம் வென்றாரே
நெல்லின் உள்ளே அரிசியைப் போல்
நம்மை உள்ளங்கையில் காப்பாரே
அல்லல் வந்து சோர்ந்தாலும்
நம்மை அழகாய் கரைகள் சேர்ப்பாரே
மனதால் அழைத்தாலே மறுகணம் வருவாரே
நம்பிக்கையோடு இருந்தால் போதும்
நன்மைகள் அள்ளித் தருவாரே
அதில் பெருகும் ஆனந்த கண்ணீரே
#saibabatamilsongstatus #saibabasongs #saibabasongtamil #shirdisaibaba #tamildevotionalsongs #shirdi #saibabawhatsappstatus #saibabablessings #saibabastatus #saibabaadvice #saibababhajans #saibababhaktisongs #saibababhajansongstamil #saibababhajan2022 #saibababhajan #shirdisaibababhajan #shirdisaibhajan #shirdisaibabablessingtoday #shirdisaibabalive #tamildevotionalsongs #tamildevotional #tamildevotionalssongs
Ещё видео!