திருநீற்றுப் பதிகம்:
திருநீறே திருவைந்தெழுத்து மந்திரமாகிய சிவாயநம என்பதன் ஸ்தூல வடிவம் (உருவம்). கண்ணுக்குத் தெரியாத மந்திர ஆற்றலே திருநீறாகத் திகழ்கிறது. நமசிவாய, சிவாயநம என்னும் பஞ்சாட்சர மந்திரத்தை ஜெபித்தபடியே நெற்றியில் நீறு பூசிக் கொள்வது இதனால் தான்.
நாம் அன்றாடம் காலைக்கடன்களை முடித்து குளித்தவுடன், கீழ்கண்ட திருஞானசம்பந்தர் இயற்றிய தேவாரப் பாடலைப் பாடி, நெற்றியில் திருநீறு அணிந்து இறைவனின் (இதில், கண்கள் மூடிய பின் தோன்றும் நம் மனதின் எண்ணமே பிரதானம், முன்னிருக்கும் உருவப்படம் அல்ல) முன் நின்று அந்தந்த கிழமைகளில் பாட வேண்டிய பாடல்களைப் பாடி பாராயணம் செய்து அன்றாட வாழ்க்கையை தொடங்குவது உத்தமம்.
வாழ்வில் இறைவன் அருள் பெற்று எல்லா நலன்களும் அடைய தின வழிபாடு துணை செய்யும்.
திருஞானசம்பந்த மூர்த்தி சுவாமிகள் அருளிய திருநீற்றுப் பதிகம்:
மந்திரமாவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரமாவது நீறு துதிக்கப்படுவது நீறு
தந்திரமாவது நீறு சமயத்தில் உள்ளது நீறு
செந்துவர் வாய் உமை பங்கன் திருஆலவாயான் திருநீறே.
Ещё видео!